twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மத்திய அரசோ… மாநில அரசோ… யார் படமும் வேண்டாம்... எஸ்.ஆர்.பிரபு ஆவேசம் !

    |

    சென்னை : மத்திய அரசோ, மாநில அரசோ தடுப்பூசியில் யாரு படமும் இடம் பெற வேண்டாம் என்று தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு கூறியுள்ளார்.

    அரசு மருத்துவமனையில் வழங்கப்படும் தடுப்பூசி சான்றிதழில் மோடியின் புகைப்படம் இடம் பெற்று வருகிறது.

    தாலிய விட தங்கம் தான் முக்கியமா போச்சா? கடைகளில் முண்டியடித்த கூட்டம்.. நடிகை கஸ்தூரி விளாசல்!தாலிய விட தங்கம் தான் முக்கியமா போச்சா? கடைகளில் முண்டியடித்த கூட்டம்.. நடிகை கஸ்தூரி விளாசல்!

    இது தொடர்பான சர்ச்சை செய்திகள் கடந்த சில நாட்களாக பரவி வரும் நிலையில் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரவு தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

    கொரோனா தடுப்பூசி

    கொரோனா தடுப்பூசி

    நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி மிக வேகப்படுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசியே கொரோனாவை ஒழிப்பதில் முக்கிய பங்காற்றும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா நோயை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக சுகாதாரப்பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. 2வது கட்டமாக 60 வயதை கடந்தவர்களுக்கு போடப்பட்டு, தற்போது 18 வயதிலிருந்து 45 வயது வரை உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது

    தடுப்பூசி சான்றிதழ்

    தடுப்பூசி சான்றிதழ்

    அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு அதற்கான தடுப்பூசி சான்றிதழ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சான்றிதழில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. மேலும், ஒருங்கிணைந்து இந்தியா கொரோனாவை வெல்லும் என்ற வாசகமும் அந்த சான்றிதழில் இடம்பெற்றுள்ளது.

    சான்றிதழில் படங்கள்

    சான்றிதழில் படங்கள்

    ஆனால் மாநில அரசுகள் தங்கள் நிதியில் வாங்கும் தடுப்பூசிகளில் இனிமேல் மாநில முதல்வர்களின் படங்களே இடம் பெற வேண்டும் எனற் கோரிக்கைகள் எழுந்துவருகின்றன. இது தொடர்பான சர்ச்சைக்கள் கடந்த சில நாட்களாக பரவி வருகின்றன.

    யார் படமும் வேண்டாம்

    யார் படமும் வேண்டாம்

    இந்நிலையில் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு தடுப்பூசி யாருக்கு போடுறாங்களோ அவங்க படத்த சான்றிதழ்ல போடுங்கப்பா, இன்னும் அதிக நம்பத்தன்மையுடனாவது இருக்கும், மத்திய அரசோ, மாநில அரசோ எல்லாம் மக்கள் பணத்துலதானே ஊசி மருந்து எல்லாம் வாங்குறோம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    Read more about: sr prabhu
    English summary
    Producer sr prabhu twitter post about corona vaccination certificate
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X