அந்த மாதிரி கதைகளை எழுதுவதை முதலில் நிறுத்துங்கள்... தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு வேண்டுகோள்!
சென்னை : தொடர்ந்து தரமான படங்களை தயாரித்து வருகிறது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம்.
கடைசியாக இந்த நிறுவனம் கார்த்தியின் கைதி மற்றும் சுல்தான் ஆகிய படங்களை தயாரித்து இருந்தது.
இப்பொழுது தெலுங்கு நடிகர் சர்வானந்த் நடிக்கும் ஓகே ஓக ஜீவிதம் என்ற படத்தை தயாரித்து வருகிறது. இந்த நிலையில் அந்த மாதிரி கதைகளை எழுதுவதை நிறுத்துங்கள் என தமிழ் இயக்குனர்களுக்கு தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வெற்றியுடன் கூடிய வசூலை
கார்த்தியின் சகுனி படத்தை தயாரித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமானவர் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு. மிகக்குறைந்த பட்ஜெட்டில் படங்களை இயக்கி வெற்றியுடன் கூடிய வசூலையும் அள்ளி வரும் எஸ்ஆர் பிரபு இயக்கும் அனைத்து திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் தனி கவனத்தைப் பெற்று வருகிறது.

ஓகே ஓக ஜீவிதம்
ஜோக்கர்,காஷ்மோரா ,அருவி, கூட்டத்தில் ஒருத்தன், தீரன் அதிகாரம் ஒன்று ,என்ஜிகே, ராட்சசி, கைதி மாற்றம் கார்த்திக்கு கடைசியாக வெளியான சுல்தான் உள்ளிட்ட படங்களை எஸ் ஆர். பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்பொழுது அறிமுக இயக்குனர் ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் சர்வானந்த் நடிப்பில் உருவாகும் ஓகே ஓக ஜீவிதம் என்ற படத்தை தயாரித்து வருகிறார். இந்த படம் தமிழில் கணம் என்ற பெயரில் தயாராகி வருகிறது.

ஒரே பேட்டனில் திரைப்படங்கள்
பெரும்பாலும் அறிமுக இயக்குனர்களின் படங்களை தயாரிப்பதில் ஆர்வம் கொண்ட எஸ்ஆர் பிரபு இப்பொழுது வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். என்னதான் தமிழ் சினிமாவில் ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டு இருந்தாலும் அது எங்கேயோ பார்த்த கதை களத்தில் இருப்பது பலரும் அறிந்ததே. காதல்,ஆக்சன், ஹாரர் ,காமெடி மற்றும் சைக்கோ த்ரில்லர் என ஒரே பேட்டனில் திரைப்படங்கள் வெளியாகி கொண்டுள்ளது.

டெட் லஸ்ஸோ, செக்ஸ் எடுக்கேஷன்
எனவே அது போன்ற வழக்கமான கதைகளை எழுதுவதை முதலில் நிறுத்துங்கள். டெட் லஸ்ஸோ, செக்ஸ் எடுக்கேஷன் உள்ளிட்ட வெப்சீரிஸ் போல வித்தியாசமான கதைகளை எதிர்பார்க்கிறேன். எனவே சைக்கோ, ஹாரர், த்ரில்லர் போன்ற கதைகளை தமிழ் இயக்குனர்கள் எழுதுவதை முதலில் நிறுத்துங்கள்.
Recommended Video

எழுதுவதை முதலில் நிறுத்துங்கள்
புதிய மொழி புதிய கலாச்சாரம் மற்றும் பல்வேறு பண்பாடுகளை கொண்ட பல வித்தியாசமான கதைகள் இங்கு இருக்கு கூற . எனவே அது போன்ற படங்களை எடுங்கள் என தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











