இது என்ன புது கூத்து: தமிழ் ராக்கர்ஸுடன் விஷால் ரகசிய டீலா?
சென்னை: விஷால் தமிழ் ராக்கர்ஸுடன் டீல் பேசியதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.
புதுப்படங்கள் ரிலீஸான அன்றே இணையதளத்தில் வெளியிடும் தமிழ் ராக்கர்ஸை ஒழிக்காமல் விட மாட்டேன் என்று தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் சவால் விட்டிருந்தார்.
இந்நிலையில் அவர் மீது புது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

தமிழ் ராக்கர்ஸ்
விஷால் தமிழ் ராக்கர்ஸுடன் டீல் பேசியதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி குற்றம் சாட்டியுள்ளார். விஷால் தமிழ் ராக்கர்ஸுடன் ரகசிய ஒப்பந்தம் செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ராதாரவி
தமிழ் ராக்கர்ஸ் யார் என்பதை கண்டுபிடித்திருந்தால் அதை விஷால் ஏன் யாரிடமும் தெரிவிக்காமல் ரகசியமாக வைத்துள்ளார் என்று நடிகர் ராதாரவி கேள்வி எழுப்பியுள்ளார்.

வாக்குறுதி
விஷால் தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டார். அவர் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும். ஒரு தமிழர் தான் தலைவராக வேண்டும் என்கிறார் ராதாரவி.

பாரதிராஜா
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தமிழர்கள் கைக்கு வர வேண்டும் என்று இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். விஷாலுக்கு எதிராக பாரதிராஜா, ராதாரவி, டி. ராஜேந்தர் உள்ளிட்டோர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











