For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிம்பு மீண்டும் வம்பு... கைவிடப்படும் மாநாடு - காரணம் சொல்லும் சுரேஷ் காமாட்சி

|

சென்னை: காலமும் நேரமும் கடந்து கொண்டே போவதால் சிம்பு நடிக்க இருந்த மாநாடு படத்தினை கைவிடுவதை தவிர்க்க இயலவில்லை. சிம்புவின் அன்பும் நட்பும் தொடரும் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறியுள்ளார். வெங்கட் பிரபு இயக்க மாநாடு படம் எனது தயாரிப்பில் புதிய பரிமாணத்தோடு தொடங்கும். விரைவில் அந்த அறிவிப்பு வரும். அனைவருக்கும் நன்றியும் அன்பும்!! என்று சுரேஷ் காமாட்சி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

சிம்புன்னு சொன்னாலே சினிமா உலகத்தில குழப்பம்தான். சூட்டிங் ஸ்பாட்டுக்கு எப்பவுமே லேட்டாதான் வருவார். படப்பிடிப்பிற்கு எப்பவுமே எப்படி வருவார்னு சொல்லவே முடியாது வந்தாலும் கொஞ்ச நேரத்தில போயிருவார்னு புகார் சொல்லுவாங்க.

ஆனா எல்லாரும் அப்படி சொல்றதில்லை. கௌதம் வாசுதேவ் மேனன் படத்தில அதிகாலை சூட்டிங் எடுத்திருக்காங்க. விடிய விடிய தூங்காம நடிச்சி கொடுத்திருக்கார். ஆனா இந்த முறை மறுபடியும் சிம்புவினால ஒரு வம்பு வந்திருக்கிறது.

விக்ரம் வேதா இந்தி ரீமேக்: வேதாவாக அமீர்கான் விக்ரமாக சயீப் அலிகான் சும்மா பட்டைய கிளப்புமா

சிம்புவின் மாநாடு

சிம்புவின் மாநாடு

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி புகார் சொல்லியிருக்கிறார். பார்ட்டி படத்தை அடுத்து சிம்புவுடன் மாநாடு படத்துக்காக கைகோர்த்தார் வெங்கட் பிரபு. அரசியலை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்த மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க கல்யாணி பிரியதர்ஷன் ஒப்பந்தமானார். இந்தப் படத்துக்காக இங்கிலாந்து சென்ற சிம்பு தனது உடல் எடையைக் குறைத்து நாடு திரும்பினார்.

ஜவ்வாக இழுத்த சிம்பு

ஜவ்வாக இழுத்த சிம்பு

மாநாடு படம் பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் படப்பிடிப்பு தள்ளிக்கொண்டே போனது. மே மாதம் தொடங்கும் என்று கூறப்பட்டது. அப்பவும் தொடங்கிய பாடில்லை. மாநாடுக்காக கொடுத்த தேதியில் நடிகர் சிம்பு கன்னடத்தில் வெளியாகி ஹிட் அடித்த மஃப்தி பட தமிழ் ரீமேக்கில் நடிப்பதற்காக சென்று விட்டாராம். மாதங்கள் உருண்ட பின்னரும் படப்பிடிப்பு தொடங்கிய பாடில்லை இதனால் பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெறுத்துப்போனார்.

மாநாடு கைவிடப்படுகிறது

மாநாடு கைவிடப்படுகிறது

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி படத்தை தற்காலிகமாக கைவிடுவதாக கூறியுள்ளார். இது குறித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்.

வணக்கம்... நான் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.. மிக மிக வருத்தத்திற்குரிய ஒரு முடிவை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். அன்புத் தம்பி சிம்பு அவர்கள் ஒரு பெரிய பொறுப்பை கொடுத்தார். தன்னை வைத்து மாநாடு படத்தை எடுக்க என்னை தூண்டி... துணை நின்ற நண்பன் சிம்புவுக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நட்பு முக்கியம்

நட்பு முக்கியம்

ஆனால் காலமும் நேரமும் கடந்துகொண்டே போவது நாளை கசப்பாக மாறிவிடக்கூடாது. எதையும் உரிய நேரத்தில் திட்டமிட்டபடி செய்கிறவன் அந்த தயாரிப்புக்கு நேர்மையோடு இருக்கிறான் என்று நம்புகிறவன் நான். ஆனால் எவ்வளவோ இழுத்துப் பிடித்தும் கால விரயம்தான் நிழ்ந்ததே தவிர படம் தொடங்க இயலவில்லை.

துணை நின்றவர்களுக்கு நன்றி

துணை நின்றவர்களுக்கு நன்றி

அதனால் சிம்பு நடிக்க இருந்த மாநாடு படத்தினை கைவிடுவதை தவிர்க்க இயலவில்லை. சிம்புவின் அன்பும் நட்பும் தொடரும்.இதுவரை என்மீது அன்பு செலுத்திய அவரின் ரசிகர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. பத்திரிகையாளர்கள் அவ்வளவு துணை நின்றார்கள். எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். வெங்கட் பிரபு இயக்க மாநாடு படம் எனது தயாரிப்பில் புதிய பரிமாணத்தோடு தொடங்கும். விரைவில் அந்த அறிவிப்பு வரும். அனைவருக்கும் நன்றியும் அன்பும்!! என்று சுரேஷ் காமாட்சி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

டைம் மேனேஜ்மெண்ட் முக்கியம்

டைம் மேனேஜ்மெண்ட் முக்கியம்

திறமைசாலிகளுக்கு ஏதாவது ஒரு விசயம் தடையாக இருக்கும். சிம்புவிற்கு தடையாக இருப்பது டைம் மேனேஜ்மென்ட் மட்டும்தானா வேற ஏதாவதா என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த உண்மை. இப்போ மாநாடு படமும் சிம்புவினால்தான் கைவிடப்பட்டிருப்பதாக தயாரிப்பாளர் சொல்லியிருக்கார்.

சிம்பு டைம் மேனேஜ்மென்ட் விசயத்தில கரெக்டா நடந்து கிட்டா ஏகப்பட்ட வெற்றிகளை பெறலாம்.

English summary
Simbu has signed a film titled Maanadu with director Venkat Prabhu. The makers announced that the film would go on floors on February 3. However, the shooting has been delayed that reports are rife that Maanadu has been dropped Producer Suresh Kamatchi
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more