அண்ணா நீ இறக்கவில்லை... கவிஞர் நா முத்துக்குமார் பிறந்தநாள்.. பிரபல தயாரிப்பாளர் உருக்கம்!

சென்னை: கவிஞர் நா முத்துக்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு பிரபல தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி உருக்கமாக டிவிட்டியுள்ளார்.

தமிழ் சினிமாவில் உதவி இயக்குநராக அறிமுகமானவர் நா முத்துக்குமார். இயக்குநர் பாலு மகேந்திராவிடம் 4 ஆண்டுகள் பணி புரிந்த நா முத்துக்குமார், சீமானின் வீரநடை படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார்.

தொடர்ந்து பல படங்களில் 100க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார் நா. முத்துக்குமார். சிறு வயதிலேயே தாயை இழந்த முத்துக்குமார் படிப்பில் ஆர்வத்தை செலுத்தினார்.

வசனகர்த்தா

வசனகர்த்தா

பாடல்கள் மட்டுமின்றி ஏராளமான கவிதை தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார் பாடலாசிரியர் நா முத்துக்குமார். கிரீடம். ஜகதீஸ்வரன் உள்ளிட்ட படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார் நா முத்துக்குமார்.

இயக்குநர் ஆக ஆசை

இயக்குநர் ஆக ஆசை

கடைசியாக ஏஆர் ரஹ்மானுடன் இணைந்து சர்வம் தாளம் மயம் படத்திற்கு பாடல்களை எழுதினார் நா முத்துக்குமார். இயக்குநர் ஆக வேண்டும் என்ற ஆசையில் கேரியரை தொடங்கிய நா. முத்துக்குமார் அதற்கான கதைகளையும் தயார் செய்து வைத்திருந்தார்.

இரண்டு தேசிய விருதுகள்

இரண்டு தேசிய விருதுகள்

தனது பாடல்களுக்காக ஏராளமான ஃபிலிம் ஃபேர் விருதுகளை குவித்துள்ள நா.முத்துக்குமார், தங்கமீன்கள் படத்தில் இடம் பெற்ற ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடல் மற்றும் சைவம் படத்தில் இடம் பெற்ற அழகு பாடல் என இரண்டு முறை தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.

நா முத்துக்குமாரின் மரணம்

நா முத்துக்குமாரின் மரணம்

இந்நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டார் நா முத்துக்குமார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த நா முத்துக்குமார் 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி திடீர் கார்டியாக் அரெஸ்ட்டால் காலமானார்.

Recommended Video

சின்னப்படங்களை பெரிய BANNER கள் வாங்க வேண்டும் | ACTOR UDHAYAA SPEECH| SENTHA | FILMIBEAT TAMIL
நினைவுகூரும் ரசிகர்கள்

நினைவுகூரும் ரசிகர்கள்

நா முத்துக்குமாருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் அவர் உயிரிழந்தார். இந்நிலையில் இன்று நா முத்துக்குமாரின் 46வது பிறந்தாள் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ரசிகர்கள் அவருடைய பாடல் வரிகளை பதிவிட்டு நினைவுகூர்ந்து வருகின்றனர்.

அண்ணா நீ இறக்கவில்லை

அண்ணா நீ இறக்கவில்லை

அந்த வகையில் இயக்குநரும் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் தயாரிப்பாளருமான சுரேஷ் காமாட்சி நா முத்துக்குமார் குறித்து டிவிட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டிருப்பதாவது, அண்ணா நீ இறக்கவில்லை உனது தமிழ் எழுத்துக்களால் தமிழர் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறாய். நீ பிறந்த இந்நாள் எம் மக்களால் மறக்கப்படாமல் நினைத்து நினைத்துப் பார்க்கப்படும் நாளாக எப்போதும் இருக்கும்.. எப்போதும் உன் நினைவுகளுடன்.. என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X