'ரெண்டு ஆட்சி மாறியும் 8 வருசமா மானியம் கிடைக்கலியே...' - ஒரு தயாரிப்பாளரின் குமுறல்!

By Shankar

தமிழகத்தில் இரண்டு முறை ஆட்சி மாற்றம் நிகழ்ந்தும் கூட, திரைப்படத் தயாரிப்பாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான மானியம் இன்னும் கிடைக்கவில்லை. அதற்கு தயாரிப்பாளர் சங்கம் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஆதங்கம் தெரிவித்தார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

"திருப்பதி லட்டு" படத்தின் மூலமாக இயக்குநர் அவதாரம் எடுக்கப்போகும் தயாரிப்பளார் சுரேஷ் காமாட்சி நேர்முகம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியதாவது:

Producer Suresh Kamatchi's appeal on subsidy

நேர்முகம் ட்ரைலர் பார்க்கும்போது படம் பார்க்கும் ஆர்வம் வருகிறது. புதுமுகம் ரஃபி நன்றாக நடிக்கிறவர் என்று தெரிகிறது. இயக்குனர் முரளி கிருஷ்ணா அனுபவம் வாய்ந்தவர். அவர் தயாரிப்பாளரைkd காப்பாற்றிவிடுவார் என நம்பலாம். இப் படம் வெற்றி பெற என் வாழ்த்துகள். இங்கு நிறைய மீடியா சகோதரர்கள் இருப்பதால் முக்கியமான ஒரு செய்தியை சொல்லியாகவேண்டும்.

Producer Suresh Kamatchi's appeal on subsidy

'சேதுபதி' படம் ரீலிசான அன்னைக்கே டோரண்ட்ல வெளியாகிருச்சு. பல கோடிகள் போட்டு நாங்கள் தயாரிப்பாளர்கள் கஷ்டப்பட்டு படம் எடுத்தா, அன்னைக்கே இப்படி​ ​ஆன்லைன்ல வரதைப் பத்தி தயாரிப்பாளர்கள் அடங்​கிய வாட்ஸ் அப்பில் செய்தியாகப் போட்டு வருத்தப்பட்டிருந்தேன். ஆனா ​​ யாரும் அதைப் பெரிசா எடுத்துக்கவே இல்லை. ​ஏன்னா யாரோ வீட்டிலதானே தீ எரியுது நமக்கென்ன என்றிருந்து விடுகிறார்கள். ​யார்​ ​பண்றாங்கன்னு​ ​கண்டுபிடிக்கிறது ஒண்ணும்​ ​அவ்ளோ பெரியவிசயமில்லை. ஆனா​ ​கண்டுபிடிக்கணுங்கிறதை ​யாரும் ​பெரிசா​ ​எடுத்துக்கல. அதான்​ ​வருந்தவேண்டிய விசயமா இருக்கு.

Producer Suresh Kamatchi's appeal on subsidy

மானியம் கிடைக்காம 400 ​தயாரிப்பாளர்கள்​ ​கஷ்டப்படுறாங்க. மானியம்​ ​கொடுத்து 8 வருஷமாச்சு.​ ​ரெண்டு ஆட்சி மாறியாச்சு.​ ​தயாரிப்பாளர் சங்கத்துல​ ​மூணு தடவை நிர்வாகிகள்​ ​மாறியாச்சு. ஆனா, இந்த​ ​மானியம் விஷயத்துல​ ​இதுவரை ஒண்ணும் பெரிசா​ ​நடக்கலை. இவங்க​ ​நேரடியாக தமிழக முதல்வர்கிட்ட கேட்​கல.​ ​

இந்திய சினிமா 100வதுஆண்டு விழா ​கொண்டாடுனப்போ, 10 கோடி கொடுத்தாங்க தமிழக முதல்வர். ஏன்னா அவங்க​ ​ஒரு நிரந்தர சினிமா​ ​கலைஞர். நிரந்தர சினிமா​ ​உறுப்பினர். சினிமா மேல​ ​அவங்களுக்கு அன்பு​ ​இருக்கு. அப்படி​ப்பட்டவங்க​ ​இதை நிறுத்தி​ ​வைக்கமாட்டாங்க. அவங்க​ ​பார்வைக்கு விசயத்தை​ ​தயாரிப்பாளர் சங்க​ ​நிர்வாகிகள் கொண்டுபோனாங்களா... அதுக்கு​ ​முயற்சி எடுத்தாங்களான்னுதெரியல.

அதே மாதிரி 3 வருசமா, தமிழ்நாடு அரசு விருதுகள் ​வழங்கும் விழா நடக்கல.​ ​அதையும் யாரும் கேட்டமாதிரி தெரியல.

Producer Suresh Kamatchi's appeal on subsidy

தேர்தல் நேரத்துல நாடகம் ​போடக்கூடாதுன்னு​ ​சொன்னா​ ​நாடகக் கலைஞர்கள்​ ​பாதிக்கப்படுவாங்கன்னு​ ​நடிகர் சங்க நிர்வாகிகள்​ ​தேர்தல் கமிஷனரை நேரா​ ​பார்த்து பேசுறாங்க. மனு​ ​கொடுக்கிறாங்க. ஆனா, தயாரிப்பாளர் சங்கநிர்வாகிகள், சங்க ​உறுப்பினர்களுக்காக அப்படி​ச் ​செயல்பட்ட மாதிரி தெரியல.​

Producer Suresh Kamatchi's appeal on subsidy

ஒரு படத்துக்கு மானியம்கேட்டு அப்ளிகேசன்​ ​கொடுக்கிறப்போ அதற்குக் கட்டணமாக ஒவ்வொரு ​ ​படத்துக்கும் அந்த படம் சார்பாக ரூ.1000/-தயாரிப்பாளர் சங்கம்​ ​மூலமாக அரசுக்கு கடந்த எட்டு வருசமா​ ​போயிட்டிருக்கு. அதனால​ ​மானியம் கேட்டு​ ​விண்ணப்பிக்கிறது​ ​அந்தத்​ து​றை சம்பந்தமான​ ​அரசு அதிகாரிகளுக்​கு நல்​லாவே தெரியும். எல்லாப்​ ​படத்தையும்​ ​பார்த்தாச்சுன்னும்​ ​சொல்றாங்க. ஆனா, ஏன்​ ​எட்டு வருசமா நிறுத்தி​ ​வச்சிருக்காங்க​ ​அப்டிங்கிறதுக்கு எந்தவிபரமும் தெரியல.​ எனக்குத் தெரிந்து நாம் அரசை சரியான முறையில் அணுகவில்லை என்றுதான் சொல்லவேண்டும். இனியாவது ​ நடிகர் சங்கம் முதல்வரை அணுகுவதைப் போல் தயாரிப்பாளர் சங்கமும் அணுக வேண்டும் என்பதுதான் என் வேண்டுகோள்," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X