மாநாடு படத்தின் அப்டேட்டை அறிவித்த தயாரிப்பாளர்... என்ன மேட்டருன்னு பாருங்க!

சென்னை: சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படத்தின் அப்டேட் குறித்த தகவலை அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள படம் மாநாடு. இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.

இயக்குநரும் தயாரிப்பாளருமான சுரேஷ் காமாட்சி இப்படத்தை தயாரித்துள்ளார். மாநாடு படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

எஸ்ஜே சூர்யா வில்லன்

எஸ்ஜே சூர்யா வில்லன்

சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்‌ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக எஸ்ஜே சூர்யாவின் நடிப்பு ட்ரெயிலர்லேயே ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

தள்ளி வைக்கப்பட்ட ரிலீஸ்

தள்ளி வைக்கப்பட்ட ரிலீஸ்

படப்பிடிப்பு போஸ்ட் புரடெக்ஷன் என அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் இப்படம் கடந்த 4ஆம் தேதி தீபாவளி தினத்தில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் பின்னர் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு நவம்பர் 25ம் தேதி மாநாடு படம் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநாடு ஆடியோ ரிலீஸ்

மாநாடு ஆடியோ ரிலீஸ்


இந்நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது சமூக வலைத்தள பக்கத்தில் 'மாநாடு படத்தின் ஆடியோ ரிலீசுக்கு தயாராக உள்ளோம். விரைவில் தேதியை அறிவிக்க இருக்கிறோம். காத்திருங்கள்' என்று பதிவு செய்து இருக்கிறார்.

சந்தோஷமான செய்தி

சந்தோஷமான செய்தி

இதனை பார்த்த ரசிகர்கள் மாநாடு ஆடியோ லாஞ்சுக்காக காத்திருக்கிறோம் என பதிவிட்டு வருகின்றனர். மேலும் பலர் சந்தோஷமான செய்தியை கூறியுள்ளீர்கள், இதற்காகதான் காத்திருக்கிறோம் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

இனியும் காத்திருக்க முடியாது

இனியும் காத்திருக்க முடியாது

சில நெட்டிசன்கள், மாநாடு படத்தை தீபாவளிக்கே ரிலீஸ் செய்திருக்கலாம். தள்ளிவைத்திருக்க வேண்டாம் என்றும் கூறி வருகின்றனர். மேலும் பலர் அப்துல் காலிக்கின் வருகைக்காக இனியும் காத்திருக்க முடியாது என்று பதிவிட்டு படத்தின் மீதான தங்களின் எதிர்பார்ப்பை பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X