மீரா மிதுன் விவகாரம்.. மன்னித்து கடந்து போகும் சூர்யா.. சிம்பு பட தயாரிப்பாளர் பாராட்டு!
சென்னை: தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துக் கொள்ள வேண்டாம் என மீரா மிதுன் விவகாரத்தில் சூர்யா விடுத்த அறிக்கையை பார்த்து நன்றி தெரிவித்து பாராட்டி உள்ளார் பிரபல தயாரிப்பாளர்.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான மீரா மிதுன், நடிகர்கள் சூர்யா மற்றும் விஜய்யின் குடும்பத்தை தரக்குறைவாக வரம்பு மீறி பேசி பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
மேலும், சூர்யா மற்றும் விஜய் ரவுடிகளை வைத்து தன்னை மிரட்டி வருவதாகவும் பரபரப்பாக பல வீடியோக்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

ஜோதிகாவை பற்றி
நடிகர் சூர்யாவின் மனைவியும் நடிகையுமான ஜோதிகாவை கெட்டவார்த்தையில் மிகவும் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்ட மீரா மிதுனை சூர்யா ரசிகர்கள் பதிலுக்கு பச்சை பச்சையாக திட்டி கமெண்ட் செய்து வருகின்றனர். ஜோதிகா மற்றும் நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவை கேவலமாக பேசியதற்கு மீரா மிதுன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிற கண்டன குரல்களும் எழுந்துள்ளன.

உதவும் குடும்பம்
அகரம் அறக்கட்டளை உருவாக்கி அதன் மூலமாக பல குழந்தைகளின் கல்விக்கு நடிகர் சூர்யா உதவி வருகிறார். உழவன் அறக்கட்டளை நடத்தி வரும் கார்த்தி விவசாயிகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். அண்மையில் EIAவிற்கு தனது வலுவான கண்டனத்தையும் பதிவு செய்து இருந்தார். தஞ்சாவூர் அரசு மருத்துவமனையை தூய்மைப் படுத்த அண்மையில் 25 லட்சம் நிதியுதவி அளித்த ஜோதிகாவை பலரும் பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆக்கப்பூர்வமாக செலவிடுங்கள்
"தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற" என்றும், "எனது தம்பி தங்கைகளின் நேரமும், சக்தியும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதே என் விருப்பம். இயக்குனர் இமயம் திருமிகு. பாரதிராஜா அவர்களுக்கு என் உளப்பூர்வமான நன்றிகள்.." என்றும் சூர்யா தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.

சிம்பு பட தயாரிப்பாளர்
சிம்புவின் மாநாடு படத்தைத் தயாரித்து வரும் சுரேஷ் காமாட்சி, நடிகர் சூர்யாவின் இந்த அறிவிப்பை பார்த்த உடன், "பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ்" என்ப மன்னித்து கடந்து போகும் சூர்யாவின் பெருந்தன்மைக்கு நன்றி" என தனது ட்விட்டர் பக்கத்தில் சூர்யாவை பாராட்டி உள்ளார்.


Click it and Unblock the Notifications











