எங்கிருந்துடா வர்றீங்க? மாவீரன் படமே ரிலீஸ் ஆகல அதற்குள்ள ரிவியூவா..விளாசிய சுரேஷ் காமாட்சி!

சென்னை: மாவீரன் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே சில யூட்யூப் சேனல்கள் பொதுமக்கள் விமர்சனத்தை வெளியிட்டதை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கடுமையாக விமர்சித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. மண்டேலா படத்துக்கு பிறகு இந்தப் படத்தை மடோன் அஸ்வின் இயக்கியிருக்கிறார்.

Producer Suresh Kamatchi trolled YouTube channels for criticizing before the release Maaveeran movie

தமிழ், தெலுங்கிலும் இப்படம் ஒரே நேரத்தில் உருவாகியுள்ளது. தெலுங்கில் இப் படத்துக்கு மாவீருடு என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

மாவீரன்: நெல்சன் இயக்கத்தில் உருவான டாக்டர் திரைப்படத்தின் மகத்தான வெற்றிக்கு பிறகு, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான், பிரின்ஸ் திரைப்படங்கள் சுமாரான அளவே ஓடியதால் மாவீரன் திரைப்படத்தை அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இத்திரைப்படம் இன்று வெளியாகி படத்திற்கு நல்ல விமர்சனம் வந்து கொண்டு இருக்கிறது.

Producer Suresh Kamatchi trolled YouTube channels for criticizing before the release Maaveeran movie

எங்கிருந்துடா: இந்நிலையில், மாவீரன் திரைப்படம் வெளியாவற்கு முன்பே, படத்தின் முதல் விமர்சனம் என்றும் பொதுமக்கள் கருத்து என்றும் சில யூடியூப் சேனல்கள் வீடியோ வெளியிட்டன. இதை கிண்டலடிக்கும் விதமாக தயாரிப்பாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அதில், எங்கிருந்துடா வர்றீங்க? இன்னும் படமே ஆரம்பிக்கலை... ஒன்பது மணிக்குத்தான் முதல் ஷோவே... அதற்குள்ள பப்ளிக் ரிவிவ்யூ... எப்படிர்ராராராரா என பதிவிட்டுள்ளார்.

Producer Suresh Kamatchi trolled YouTube channels for criticizing before the release Maaveeran movie

மோசமான விமர்சனம்: யூடியூப் சேனல்கள் நாளுக்கு நாள் பெருகி விட்டதால், தங்களது பாலோவர்களை அதிகரித்துக்கொள்ள இப்படி எதையாவது விவகாரமான வேலையை செய்து வருகின்றனர். படம் வெளியான அன்றே படத்தின் விமர்சனம் என்று படம் குறித்து மோசமான விமர்சனத்தை ஒளிபரப்பும் யூடியூப் சேனல்கள் மீது தொழில் ரீதியாகவும்,சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X