இன்னும் விடுதலை செய்யாமலிருப்பது என்ன நியாயமோ? பேரறிவாளனுக்கு ஆதரவாக பிரபல தயாரிப்பாளர் குரல்!
சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் கைது செய்யப்பட்டு 31ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் பிரபல தயாரிப்பாளர் அவர் விடுதலைக்காக குரல் கொடுத்துள்ளார்.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் சிறையில் அடைக்கப்பட்டு 31 ஆண்டுகள் ஆகிவிட்டன. பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என அவரது தாயார் பல ஆண்டுகளாக போராடி வருகிறார்.
தற்போது பேரறிவாளன் சிறை விடுப்பில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் பேரறிவாளனை விடுதலை செய்யக்கோரி இணையதள பரப்புரை தொடங்கியுதுள்ளது.

இணைய பரப்புரை
அதில் விசாரணை என்று பெற்றோரிடம் சொல்லி அழைத்துச் சென்று 32 ஆண்டுகள் ஆகின்றது. 31 ஆண்டுகளாக ஓய்வின்றி ஓடிக் கொண்டிருக்கும் அற்புதம் அம்மாவின் சமரசமற்ற போராட்டத்தில் துணை நிற்போம் விடுதலையை வென்றெடுப்போம் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

சுரேஷ் காமாட்சி
இதனை தொடர்ந்து சினிமா பிரபலங்கள் பலரும் இதற்கு ஆதரவாகவும் பேரறிவாளனை விடுதலை செய்யக்கோரியும் தங்களின் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் பிரபல தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சியும் குரல் கொடுத்துள்ளார்.
எத்தனையோ நிரூபிக்கப்பட்ட குற்றங்களுக்கு விடுதலை கொடுத்துவிட்டார்கள். சில தூக்குத் தண்டனை கைதிகளுக்கு மன்னிப்பும் அளித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
— sureshkamatchi (sureshkamatchi) June 11, 2021
ஆனால், செய்யாத குற்றத்திற்காய் 31 ஆண்டுகள் சிறைவாசம் என்பது ஒரு மனிதனை வதைத்து வாழவிடாமல் செய்துவிட்டும் இன்னும் 1/2 pic.twitter.com/8CliAlXzsO
என்ன நியாயமோ?
அவர் பதிவிட்டிருப்பதாவது, எத்தனையோ நிரூபிக்கப்பட்ட குற்றங்களுக்கு விடுதலை கொடுத்துவிட்டார்கள். சில தூக்குத் தண்டனை கைதிகளுக்கு மன்னிப்பும் அளித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், செய்யாத குற்றத்திற்காய் 31 ஆண்டுகள் சிறைவாசம் என்பது ஒரு மனிதனை வதைத்து வாழவிடாமல் செய்துவிட்டும் இன்னும் விடுதலை செய்யாமலிருப்பது என்ன நியாயமோ?
விடுதலை செய்யாமலிருப்பது என்ன நியாயமோ?
— sureshkamatchi (sureshkamatchi) June 11, 2021
விசாரணை அதிகாரியே வாக்குமூலம் தவறுதலாக எழுதப்பட்டுவிட்டது எனக் கூறிய பின்பும் சிறைவாசம் ஏனோ??
அண்ணன் #பேரறிவாளனை விடுதலை செய்க. ஒரு தாயின் மடிப்பிச்சைக்கு பிள்ளை வரம் அருளுங்கள்... எத்தனை நெடிய துயர போராட்டத்தை ஆட்சியாளர்களுடன் 1/3
துயர போராட்டம்
விசாரணை அதிகாரியே வாக்குமூலம் தவறுதலாக எழுதப்பட்டுவிட்டது எனக் கூறிய பின்பும் சிறைவாசம் ஏனோ?? அண்ணன் பேரறிவாளனை விடுதலை செய்க. ஒரு தாயின் மடிப்பிச்சைக்கு பிள்ளை வரம் அருளுங்கள்... எத்தனை நெடிய துயர போராட்டத்தை ஆட்சியாளர்களுடன் கனிவுடன் செய்து வருகிறார்.
தாயோடு வாழ வையுங்கள்
சட்டம் அரசைக் கைகாட்ட, அரசு கவர்னரைக் கைகாட்ட... யாரோ ஒருவர் கைநீட்டி அந்தப் பிள்ளையை அவர் தாயோடு வாழவையுங்கள். வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.. விடுதலை செய்யுங்கள். நன்றி.. இவ்வாறு சுரேஷ் காமாட்சி குறிப்பிட்டுள்ளார்.

பா ரஞ்சித்
இதேபோல் இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ், பா ரஞ்சித் உள்ளிட்ட பிரபலங்களும் அற்புதம்மாளுக்கு ஆதரவாக #31yearsofInjustice என்ற ஹேஷ்டேக்கை குறிப்பிட்டு ட்ரென்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











