Vijay - விஜய்தான் நிஜ கதாநாயகன்.. புகழ்ந்து தள்ளிய சிம்பு பட தயாரிப்பாளர்
சென்னை: Vijay (விஜய்) விஜய் தன்னை ஒரு நிஜ கதாநாயகன் என நிரூபித்துவிட்டதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்திருக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார் விஜய். படம் அக்டோபர் 19ஆம் தேதி பான் இந்தியா படமாக வெளியாகவிருக்கிறது. விஜய் போர்ஷன் முடிந்த சூழலில் விரைவில் படத்தின் ஒட்டுமொத்த ஷூட்டிங்கும் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்துக்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் விஜய்.
பரவிய வதந்தி மறுத்த விஜய்: சூழல் இப்படி இருக்க விஜய் அரசியலுக்கு வரவிருப்பதால் வெங்கட் பிரபு படத்தில் நடித்த பிறகு மூன்று வருடங்கள் சினிமாவிலிருந்து ஓய்வு பெறவிருப்பதாக சில நாட்களுக்கு முன்பு தகவல் பரவியது. ஆனால் அந்தத் தகவலில் உண்மையில்லை என விஜய் தரப்பு திட்டவட்டமாக மறுத்துவிட்டது. மேலும் விஜய் தொடர்ந்து நடிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷங்கருடன் கூட்டணி: இதற்கிடையே ஷங்கருடன் விஜய் மீண்டும் நடிக்கவிருப்பதாக லேட்டஸ்ட் தகவல் வெளியானது. அதன்படி அந்தப் படம் முதல்வன் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் எனவும்; அரசியல் ஆசையில் இருக்கும் விஜய் அந்தப் படத்தை பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார் எனவும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் நடவடிக்கை: நிலைமை இப்படி இருக்க விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. அந்தவகையில் சமீபத்தில்கூட 234 தொகுதிகளில் இருந்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர், மாணவிகளை நேரில் சந்தித்து சான்றிதழையும், ஊக்கத் தொகையையும் வழங்கினார் விஜய்.
ஆலோசனை: மேலும் லியோ ஷூட்டிங்கை முடித்திருக்கும் விஜய் கடந்த இரண்டு நாட்களாக தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை செய்துவருகிறார். அதில் விஜய்யின் அரசியல் மூவ் குறித்த விஷயங்கள் விவாதிக்கப்படலாம் என தெரிகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், காமராஜரின் பிறந்தநாளான ஜூலை 15ஆம் தேதியிலிருந்து விஜய் மக்கள் இயக்கம் சார்பாக இரவு நேர பாட சாலையை அனைத்து மாவட்டங்களிலும் தொடங்க திட்டமிடப்பட்டிருக்கிறது.
பாராட்டு: விஜய்யின் இந்த செயலுக்கு பலரும் தங்களது பாராட்டை தெரிவித்துவருகின்றனர். அந்தவகையில் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், "எத்தனையோ குழந்தைகள் இன்னமும் இரவு நேரம் படிக்க வசதி இல்லாமல் தவிக்கிறார்கள். மதிப்பெண்களால் வெற்றிபெற்று நாளிதழ்களில் மின்னொளியில் படித்தேன்... மண்ணெண்ணெய் விளக்கில் படித்தேன் என மாணாக்கர்கள் சொல்லும்போதுதான் அவர்களின் வறுமை புரிய வருகிறது.
அப்படியிருக்க, தமிழ் சினிமாவில் கோலோச்சும் நாயகன் விஜய் அவர்கள் இரவு பாடசாலை திட்டத்தை செயல்படுத்த முன்வந்திருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. தான் நிஜ கதாநாயகன் என தன் செயல்பாடுகளை அமைத்துக்கொண்டிருப்பது கல்விச் செல்வம் தழைக்க மிக மிக அவசியமானது. தொடர்க. வாழ்த்துகள்" என குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











