twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மாநாடு படத்துக்கே இந்த நிலைமையா...தயாரிப்பாளர் போட்ட வேதனை ட்வீட்

    |

    சென்னை : விநியோகஸ்தர்களால் மாநாடு படத்திற்கு ஏற்பட்ட நிலைமையை வேதனையுடன் ட்வீட் செய்துள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. இதற்கு ரசிகர்கள் அதிர்ச்சியும், கவலையும் தெரிவித்துள்ளனர்.

    Recommended Video

    105 இருந்து 72 கிலோவுக்கு வந்த சிம்பு.. ரசிகர்களை கண் கலங்க வைக்கும் 'அந்த' வீடியோ!

    டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு படம் பல பிரச்சனைகள், தடைகளை தாண்டி நவம்பர் 25ம் தேதி ரிலீசானது. இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார். தியேட்டரைத் தொடர்ந்து ஓடிடி.,யிலும் மாநாடு படம் வெளியிடப்பட்டது. தியேட்டர், ஓடிடி என அனைத்திலும் மாநாடு படம் நல்ல வரவேற்பை பெற்றது. ரசிகர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பை புகழ்ந்து தள்ளினர்.

    மீண்டும் நிறுத்தப்பட்ட பிக்பாஸ் அல்டிமேட் லைவ் ஸ்ட்ரீமிங்...இப்போ என்ன பிரச்சனை தெரியுமா ? மீண்டும் நிறுத்தப்பட்ட பிக்பாஸ் அல்டிமேட் லைவ் ஸ்ட்ரீமிங்...இப்போ என்ன பிரச்சனை தெரியுமா ?

    100 கோடி கிளப்பில் மாநாடு

    100 கோடி கிளப்பில் மாநாடு

    மாநாடு படம் தியேட்டரில் ரிலீசான முதல் நாளே ரூ.10 கோடி வசூலை பெற்றதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தொடர்ந்து சில நாட்கள் மாநாடு படத்தின் தினசரி வசூலை ட்விட்டரில் பகிர்ந்து வந்தார். மாநாடு படத்தின் 25வது நாளில் இந்த படம் 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்ததாக அறிவிக்கப்பட்டது. அதற்கு பிறகு மாநாடு படம் பற்றி எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இருந்தாலும் தியேட்டர்களில் மாநாடு படம் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது.

    மாநாடு படத்துக்கே இந்த நிலைமை

    மாநாடு படத்துக்கே இந்த நிலைமை

    இந்நிலையில் மாநாடு படம் ரிலீசாகி இன்றுடன் 75 நாட்கள் ஆகிறது. இது பற்றி சுரேஷ் காமாட்சி வேதனையுடன் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், நாளை 75வது நாள் மாநாடு. ரோகிணியில் கோலாகலம் காண்கிறது. 75 நாட்கள் ஆகியும் இன்னமும் விநியோகஸ்தர்கள் கணக்கு ஒப்படைக்கவில்லை. ஒரு வெற்றிப்படத்திற்கே இந்த நிலைன்னா...மற்ற படங்களின் நிலையை என்ன சொல்ல? இப்படி இருந்தால் எப்படி தொழில் செய்ய ? என கேட்டுள்ளார்.

    ஓடிடி பக்கம் போறது தப்பா

    ஓடிடி பக்கம் போறது தப்பா

    அதோடு, நடிகர்கள், தயாரிப்பாளர்கள் ஓடிடி பக்கம் போறதுல என்ன தப்பு இருக்குன்னு யோசிக்க வைக்குறாங்க என வேதனையுடன் தெரிவித்துள்ளார். சுரேஷ் காமாட்சியின் இந்த கருத்திற்கு பல தயாரிப்பு நிறுவனங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ரசிகர்களும் அதிர்ச்சியும், வேதனையும் தெரிவித்துள்ளனர்.

    வச்சு செய்யும் நெட்டிசன்கள்

    வச்சு செய்யும் நெட்டிசன்கள்

    அதே சமயம், மாநாடு சக்சஸ் மீட்டில் சுரேஷ் காமாட்சி பேசிய வீடியோவை வைத்து ட்ரோல் செய்தும் வருகின்றனர். அந்த விழாவில் மேடையில் பேசிய சுரேஷ் காமாட்சி, ஒரு படம் 100 கோடி வசூல், 200 கோடி வசூல்ன்னு நம்ம சொல்ல வேண்டியதோ, ப்ரோமோட் பண்ண வேண்டியதோ இல்லை. மக்களுக்கு தெரியும் வெற்றி படமா இல்லையான்னு. மக்கள் பேசட்டும் எத்தனை கோடி வசூல் ஆச்சுன்னு என்று பேசி உள்ளார். இந்த வீடியோவை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

    English summary
    Today Simbu's Maanaadu movie reached 75th day. On this day, producer suresh kamatchi shared his worry on distributors. He says that in spite of Maanadu crossing 75 days, the distributors haven’t settled the accounts yet. So producers and actors opting for OTTs is justified.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X