Exclusive - ஃபைன் போட்டு 15 லட்சம் ரூபாய் வாங்கிட்டாரு.. எஸ்.ஜே. சூர்யாவை தாக்கிய தயாரிப்பாளர்

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்தவர் எஸ்.ஜே.சூர்யா. இப்போது இயக்கத்திலிருந்து ஒதுங்கியிருந்தாலும் பிஸியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். முக்கியமாக நடிப்பு அரக்கன் என்று பெயர் எடுத்திருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் இந்தியன் 2, ராயன் ஆகிய திரைப்படங்கள் தமிழில் வெளியாகின. தெலுங்கில் சரிபோதா சனிவாரம், கேம் சேஞ்சர் ஆகிய படங்கள் வெளியாகின.சூழல் இப்படி இருக்க சமீபத்தில் ஜின் படத்தின் இயக்குநர் அந்தப் படத்தின் விழாவில் தன்னை ஒரு ஹீரோ இரண்டு வருடங்கள் அலைக்கழித்ததாக தெரிவித்திருந்தார். அந்த ஹீரோ எஸ்.ஜே.சூர்யாதான் என்று பேச்சுக்கள் எழுந்த நிலையில் தயாரிப்பாளர் ரமேஷ் எஸ்.ஜே.சூர்யா குறித்து ஃபில்மிபீட் தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்தார்.

கோலிவுட்டில் சில படங்களை மட்டுமே இயக்கியிருந்தாலும் இன்றுவரை பலரது ஃபேவரைட் இயக்குநராக இருப்பவர் எஸ்.ஜே.சூர்யா. அஜித்தை வைத்து வாலி படத்தை முதல்முதலாக இயக்கினார். அந்தப் படத்துக்காக அவர் சம்பளமே வாங்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. அந்தப் படத்தின் மேக்கிங்கிலும், கதையிலும் எஸ்.ஜே.சூர்யாவின் அசுர உழைப்பு வெளிப்பட்டதால் படம் மெகா ஹிட்டானது.

குஷி: வாலி படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு விஜய் ஜோதிகாவை வைத்து குஷி படத்தை இயக்கினார். வாலி படம் போலவே குஷி படமும் மெகா ஹிட்டடிக்க கோலிவுட்டின் கவனிக்கப்படும் இயக்குநராக மாறினார். அந்தப் படத்துக்காக முதல்முறையாக லட்சங்களில் அவர் அட்வான்ஸாக வாங்கிய பணத்தில் தனது உதவி இயக்குநர்கள் ஏழு பேருக்கு புது பைக்கை வாங்கிக்கொடுத்தது சமீபத்தில் தெரியவந்து அவருக்கு பலரும் தங்களது பாராட்டை தெரிவித்தனர்.

அப்போதே செய்துவிட்ட சூர்யா: இப்போது இருக்கும் தொழில்நுட்பத்தின் துணையோடு சைன்ஸ் ஃபிக்‌ஷன் கதையை எடுப்பது சுலபத்திலும் சுலபமாக மாறிவிட்டது. ஆனால் தொழில்நுட்பம் பெரிதாக வளராத காலத்திலேயே எஸ்.ஜே.சூர்யா நியூ என்ற சைன்ஸ் ஃபிக்‌ஷன் கதையை எடுத்து அதில் வெற்றியும் கண்டார். அதேபோல் பேரலல் உலகம் என்ற தீமை வைத்துக்கொண்டு அன்பே ஆருயிரே படத்தை எடுத்து அசத்தினார். பிறகு நீண்ட வருடங்களுக்கு பிறகு இசை படத்தை இயக்கினார். அதனையடுத்து படங்கள் எதுவும் இயக்காத அவர் நடிகராக கலக்கிக்கொண்டிருக்கிறார்.

ஜின் பட சர்ச்சை: சூழல் இப்படி இருக்க டி.ஆர்.பாலா என்பவர் ஜின் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். அந்தப் படத்தின் விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. அப்போது பேசிய அவர், 'முதலில் இந்தப் படத்தின் கதையை ஒரு ஹீரோவிடம் கூறினேன். ஐந்து முதல் ஆறு சிட்டிங்வரை அமரலாம் என்று கூறினார். அவருக்கு அந்தக் கதை பிடித்தது. என்னையும் ஏகத்துக்கும் புகழ்ந்தார். ஆனால் ஒரு படம் வெளியாகி மெகா ஹிட்டானதை அடுத்து; நீ சினிமாவுக்கே அன்ஃபிட் என்று கூறிவிட்டார். கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் அவரை நம்பியிருந்து ஏமாற்றம் அடைந்தேன்' என தெரிவித்தார்.

தயாரிப்பாளர் பேட்டி: அவரது அந்தப் பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அந்த இயக்குநர் கூறிய ஹீரோ எஸ்.ஜே.சூர்யாதான் என்றும் பேச்சுக்கள் எழுந்தன. சூழல் இப்படி இருக்க தயாரிப்பாளர் டி.ஆர்.ரமேஷ் ஃபில்மிபீட் தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர், "உலகத்திலேயே டீ குடித்ததற்கு, சாப்பிட்டதற்கு யாரேனும் ஃபைன் போடுவார்களா?.. எஸ்.ஜே.சூர்யா 15 வருடங்களுக்கு கணக்கு செய்து என்னிடம் வாங்கினார். அவர் அப்படி ஒரு துரோகி. சினிமாவில் ஒன்றாம் நம்பர் துரோகி என்றால் அது அவர்தான்.

Producer T R Ramesh Exclusive Interview To Filmibeat about S J Suryah

சினிமாவுக்கு லாயக்கு இல்லை: எஸ்.ஜே.சூர்யா சினிமாவுக்கே லாயக்கு இல்லை. அவர் எனக்கு துரோகம் செய்ததற்கான அத்தனை ஆதாரங்களும் எனக்கு இருக்கின்ற்னா. வாலி, குஷி என இரண்டு படங்களை ஹிட் கொடுத்தார். ஆனால் அதற்கு பிறகு அந்தப் படங்களின் ஹீரோக்கள் எதற்காக எஸ்.ஜே.சூர்யாவை அழைத்து இன்னொரு பட வாய்ப்பு கொடுக்கவில்லை. அந்த இரண்டு படங்களுமே ஜீவா இருந்ததால்தான் ஹிட் ஆனது. அவர் மட்டும் இல்லாமல் போயிருந்தால் சில இயக்குநர்கள் சினிமாவிலேயே இருந்திருக்கமாட்டார்கள்.

25 வருட பழக்கம்: நானும் அவரும் 25 வருட பழக்கம். நியூ, அன்பே ஆருயிரே படங்கள் போதெல்லாம் நாங்கள் நெருக்கமாக இருந்தோம். இசை, இறைவி போன்ற படங்களில் எனது பெயர் இணை தயாரிப்பு என்று வரும். அதற்கு பிறகு அவர் என்னிடம், 'நீங்கள் என்னை உருவாக்கியிருக்கிறீர்கள். அதனால் உங்களுக்கு ஒரு படம் செய்கிறேன் என்று சொல்லிதான் ஒரு படத்தில் நடிக்க கமிட்டானார். அவரே அந்த படத்துக்கு இயக்குநரையெல்லாம் ஃபிக்ஸ் செய்தார். படமும் முடிந்து ரிலீஸ் ஆனது. ஆனால் அது யாருக்கும் தெரியாது. கடல் தாண்டி எங்கே வேண்டுமானாலும் போகலாம். ஆனால் கடைசியில் இங்கேதானே வர வேண்டும்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X