ஞானவேலுதான் சூர்யா தம்பினு பொய் சொன்னேன்.. அவங்க 10 பைசா கொடுக்கல.. தயாரிப்பாளர் ஓபன் டாக்
சென்னை: Paruthiveeran Controversy (பருத்திவீரன் பஞ்சாயத்து) பருத்திவீரன் படத்தை சுற்றி நடந்துகொண்டிருக்கும் பிரச்னையில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக குரல்கள் வலுக்க தொடங்கியிருக்கின்றன.
அமீர் இயக்கத்தில் உருவான பருத்திவீரன் திரைப்படம் 16 வருடங்கள் கழித்து மீண்டும் ஹாட் டாபிக்காக மாறியிருக்கிறது. சமீபத்தில் ஞானவேல் ராஜா அளித்த பேட்டி ஒன்றில், “நான் கொடுத்த பணத்தை ஈடுகட்டவே அமீர் பருத்திவீரன் படத்தை இயக்கிக்கொடுத்தார். சூர்யாவோ, கார்த்தியோ அவரிடம் பருத்திவீரனுக்கான வாய்ப்பை கேட்கவில்லை. அமீர் ஒரு திருடன். எனது பணத்தில் அவர் தொழில் கற்றுக்கொண்டார்.

சூர்யா கொடுத்த வாழ்க்கை: மௌனம் பேசியதே படத்தின் மூலம் அமீருக்கு சூர்யாதான் வாழ்க்கை கொடுத்தார். முதலில் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் அமீரை இயக்குநராக போட வேண்டாம் என்று சொன்னார். ஆனால் சூர்யா அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. அதேபோல் அவர் எங்கள் எல்லோரையும் திருடன் என்று சொன்னார்” என ஏகப்பட்ட விஷயங்களை பேசியிருந்தார்.
சூடான பஞ்சாயத்து: இந்தப் பேட்டியை அடுத்து அமீர் தன்னுடைய பேட்டியில் ஞானவேல் ராஜாவுக்கு பதிலடி கொடுத்திருந்தார். மேலும் தனக்கும் சூர்யாவுக்கும் ஏற்பட்ட பிரச்னைக்கு காரணமே ஞானவேல் ராஜாதான் என கூறிய அவர் நீண்ட அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அதில் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக காட்டமாக பேசியிருந்த அவர், பருத்திவீரனில் என்ன நடந்தது என்பது குறித்து தெரிந்தவர்கள் எல்லாம் ஏன் அமைதியாக இருக்கிறார்கள் என புரியவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அமீருக்கு ஆதரவு: அமீரின் அந்த அறிக்கையை அடுத்து இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரகனி, கரு.பழனியப்பன் உள்ளிட்டோர் தங்களது ஆதரவை அமீருக்கு கொடுத்தனர். சசிகுமார் வெளியிட்டிருந்த பதிவில், பருத்திவீரனுக்கு நானேகூட பணம் கொடுத்திருக்கிறேன் என ஞானவேலுக்கு எதிராக குரல் உயர்த்தினார். அதேபோல் சமுத்திரகனியும் அமீருக்கு ஆதரவு தெரிவித்து கார்த்தி இதில் ஏன் அமைதியாக இருக்கிறார் என கேள்வி எழுப்பியிருந்தார்.
தயாரிப்பாளர் பேட்டி: இந்நிலையில் தயாரிப்பாளர் டி.ஆர். ரமேஷ் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “சூர்யாவுக்கு மன்றம் ஆரம்பிக்க வேண்டும் என்று என்னிடம் வந்தவர்தான் ஞானவேல் ராஜா. கொஞ்ச நாட்கள் கழித்து மீண்டும் வந்த அவர், பருத்திவீரன் என்ற படத்தை தயாரிக்கப்போவதாகவும் இயக்குநர் அமீர் ஹீரோ சூர்யா தம்பி கார்த்தி என்றும் கூறினார்.
அன்புச்செழியன்: பிறகு அவரை மதுரை அன்புச்செழியனிடம் அழைத்து சென்ற நான் ஞானவேலுவை சூர்யாவின் தம்பி என்று பொய் சொல்லி பணம் வாங்கிக்கொடுத்தேன். இந்தப் படத்துக்கு முதன்முதலாக பைனான்ஸ் செய்தது அன்புச்செழியனே. பிறகுதான் மற்றவர்கள் எல்லாம். அதனை ஞானவேலுவால் மறக்க முடியாது.
பத்து பைசா கொடுக்காது: சூர்யாவின் குடும்பம் எல்லாம் பத்து பைசாகூட கொடுக்காது. சிவக்குமார் மூத்த மகனுக்கே உதவி செய்யவில்லை இரண்டாவது மகனுக்கா உதவி செய்வார். பத்து பைசாவுக்கு பிரோயஜனம் இல்லை. அமீர் எல்லாம் கலையை நேசித்து வந்தவர். அவர் எல்லாம் திருடமாட்டார்” என்றார்.


Click it and Unblock the Notifications











