தயாரிப்பாளர் டி.சிவா மகளின் திருமண வரவேற்பு.. திரண்டு வந்து வாழ்த்திய பிரபலங்கள்!

சென்னை: தயாரிப்பாளர் டி சிவாவின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில், முதல் ஆளாக விஜய் கலந்து கொண்டு மணமக்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் அரசியல் பிரபலங்கள் முதல் சினிமா பிரபலங்கள் என பலர் கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்தினார்கள்.

தயாரிப்பாளரான டி சிவா, விநியோகஸ்தர் மற்றும் நடிகர் ஆவார். இவர் 1987 ஆம் ஆண்டு விஜய்காந்தை வைத்து சொல்வதெல்லாம் உண்மை என்ற படத்தை எடுத்தார். இதை தொடர்ந்து, பூந்தோட்ட காவல்காரன், பாட்டுக்கு ஒரு தலைவன், ராசய்யா, சாமிபோட்ட முடிச்சு, சரோஜா, கனிமொழி, அரவான், கடவுள் இருக்கான் குமாரு மற்றும் ஜெமினி கணேசனும் சுருளி என சுமார் 25க்கும் மேற்பட்ட திரைப்படங்களை அம்மா கிரியேஷன்ஸ் என்று சொந்த தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளார்.

producer T Siva marriage reception

தயாரிப்பாளர் மகளின் திருமணம்: டி.சிவா மற்றும் அருணா தம்பதியரின் மகள் டாக்டர் தக்ஷிணா சிவாவுக்கும், சீ.பிரபாகரன் - கோ.அங்கயற்கண்ணி என்ற பாரதி தம்பதியரின் மகன் டாக்டர் சந்தீப் பிரபாகருக்கு கடந்த மாதம் 27ந் தேதி தஞ்சையில் கோலாகலமாக திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் ராதிகா, சரத்குமார், ஜெய், பிரபு என பலர் குடும்பத்தோடு கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். இதையடுத்து, ராணி மெய்யம்மை திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நேற்று நடந்தது. இதில் த.வெ.க. தலைவர் விஜய் முதல் ஆளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு விஜய் பாரம்பரிய உடையான பட்டு வேட்டி சட்டையில் வந்திருந்தார். இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டானது.

திரண்டு வந்து வாழ்த்திய பிரபலங்கள்: இதைத்தொடர்ந்து, திருமண வரவேற்பிற்கு ரவி மோகன் தனது தோழியும் பாடகியுமாக கெனிஷாவுடன் வந்திருந்தார். இயக்குநர் ஹரி, தனது மனைவி ஸ்ரீதேவியுடன் வந்திருந்தார். இயக்குநர்கள் ஷங்கர், டிஆர் ராஜேந்திரன், பேரரசு, பா ரஞ்சித், ஆர் வி உதயகுமார், விஜய் ஆண்டனி, நடிகர்கள் பார்த்திபன், நகுல், பிரசன்னா, சினேகா, யோகி பாபு, பிரேம்ஜி, ரமேஷ் கண்ணா, சந்தான பாரதி, காளிதாஸ் ஜெயராம், கலையரசன், காளிவெங்கட் என ஒட்டுமொத்த திரைப்பிரபலங்களும் டி சிவாவின் மகள் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X