சிவகார்த்திகேயன் பிரச்சனைக்கு எங்ககிட்ட வந்து அழுவான்.. ஞானவேல் ராஜாவை டேமேஜ் பண்ண தயாரிப்பாளர்!
சென்னை: தயாரிப்பாளர் தாணுவின் வீடியோவை தொடர்ந்து தயாரிப்பாளர் டி. சிவாவின் வீடியோவையும் ஷேர் செய்து ப்ளூ சட்டை மாறன் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக தனது வன்மத்தை கக்க ஆரம்பித்துள்ளார்.
நடிகர் சூர்யா மற்றும் கார்த்தியை வைத்து படம் பண்ணி தனக்கு லாஸ் ஆகிடுச்சு என்றும் மற்ற எந்த நடிகர்களும் தனது தயாரிப்பு கம்பெனியில் படம் பண்ண வர மாட்றாங்க என புலம்புவான்.

சிவகார்த்திகேயன் டேட் பிரச்சனை என்றால் ஓடி வந்து அழுவான், இதுதான் அவன் பொழப்பு என டி. சிவா பேசிய வீடியோவை ப்ளூ சட்டை மாறன் சரியான நேரத்தில் ஷேர் செய்து பழி வாங்கி வருகிறார்.
ஞானவேல்ராஜாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு: சமுத்திரகனி, சசிகுமார் உள்ளிட்ட பிரபலங்கள் அமீருக்கு ஆதரவாகவும் ஞானவேல் ராஜாவுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சினிமாவில் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக இதற்கு முன் பல பிரபலங்கள் பேசிய வீடியோக்களை ப்ளூ சட்டை மாறன் ஷேர் செய்து யாரெல்லாம் அவரை பாராட்டியிருக்காங்க பாருங்க என போட்டுக் கொடுத்து வருகிறார்.
மோசமான தயாரிப்பாளர்: ஒரு பைனான்சியரிடம் இருந்து காசு வாங்கி இன்னொரு பைனான்சியருக்கு கொடுத்து பிரச்சனை பண்ணியே படம் எடுத்து வருவார் என்றும் அவரால் மற்றவர்களுக்குத் தான் சிக்கல் என்றும் எந்தவொரு படத்தையும் சொந்த பணம் போட்டு எடுக்கவில்லை என்றும் அவரால் சூர்யா குடும்பத்துக்குத் தான் கெட்டப் பெயர் என்றும் டி. சிவா பொங்கிய பழைய வீடியோ தற்போது தீயாக பரவி வருகிறது.
சிவகார்த்திகேயன் டேட் பிரச்சனை: மிஸ்டர் லோக்கல் படத்தை தயாரிக்கும் போது சிவகார்த்திகேயன் டேட் பிரச்சனை என வந்து அழுவான். அனைத்திற்கும் நாங்க தான் சமரசம் பேசி சரி செய்வோம். பின்னர் எங்களை பத்தியே தப்பா பேசுவான் என டி. சிவா வெளுத்து வாங்கி உள்ளார். ஞானவேல் ராஜாவுக்கு ஆதரவான கருத்துக்களை விட அவருக்கு எதிரான பஞ்சாயத்துக்கள் தான் அதிகரித்து வருகிறது. அமீர் மற்றும் ஞானவேல் ராஜா பிரச்சனை இன்னும் என்ன என்ன வில்லங்கத்தை எல்லாம் வெளியே கொண்டு வரும் என ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











