விஜயகாந்த் தெய்வமாகி விட்டார்.. பலமுறை அழுது இருக்கிறார்.. சுந்தரா டிராவல்ஸ் தயாரிப்பாளர் பேட்டி!

சென்னை: தேவாருக்கு பிறகு விஜயகாந்த்தை மக்கள் தெய்வமாக வணங்குகிறார்கள், இவரை யார் எல்லாம் விமர்சித்தார்களே அவர்களுக்கு எல்லாம் தண்டனை கிடைக்கும் எனறு சுந்தரா டிராவல்ஸ் படத்தின் தயாரிப்பாளர் தங்கராஜ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

2002 ஆம் ஆண்டு அசோகன் இயக்கத்தில், முரளி , ராதா , வடிவேலு,வாசு , சபிதா ஆனந்த் , வினு சக்ரவர்த்தி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சுந்தரா டிராவல்ஸ். நகைச்சுவை திரைப்படமான இப்படத்தில் முரளி, வடிவேலுவின் காமினேஷன் பக்காவாக இருந்தது. குறிப்பாக திருமணத்திற்கு மாப்பிள்ளையை ரெடி பண்ணும் காட்சியை பார்த்து சிரிக்காதவர்களே இருக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும். இந்த படம் வெளியாகி 22ஆண்டுகள் ஆன போதும் இந்த படத்தை ரசித்து பார்ப்பதற்கு என்று தனிக்கூட்டம் உள்ளது.

vijayakanth sundara travels

சுந்தரா டிராவல்ஸ்: முரளி மற்றும் வலுவேலு நண்பர்களாக இருக்கிறார்கள். இதில் முரளி, தனது தந்தை சாலை விபத்தில் உயிரிழந்ததால், இழப்பீடாக கிடைத்த பேருந்தினை வைத்திருக்கிறார். இந்த பேருந்துக்கு சுந்தரா டிராவல்ஸ் என பெயர் வைத்து இருக்கிறார்கள். அந்த பேருந்தின் பெயர் தான் படத்திற்கும் தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து தான் இருவருக்கும் வீடாக உள்ளது. இந்த பேருந்துக்கு சரியாக புக்கில் வராததால், பேருந்தில் ஆங்காங்கே ஓட்டை ஓட்டையாக இருக்கிறது. இதுவும் படத்தின் நகைச்சுவைக்கு காரணமாக அமைந்துவிட்டது.இந்த பேருந்தில் ராதா என்கிற பெண் தஞ்சம், அடைகிறாள். ஆரம்பத்தில் அந்த பெண்னை பேருந்தில் இருந்து இருவரும் விரட்ட நினைக்கின்றனர். கடைசியில் அந்த பெண் மீது முரளிக்கு காதல் வரும் நேரத்தில் அந்த பெண் அமைச்சரின் மகள் என்பது தெரிய வர, பல கலாட்டாக்களுக்கு பிறகு இவர்களின் காதல் கை கூடுவது தான் படத்தின் கதை.

முரளி, வடிவேலு செய்த டார்ச்சர்: இந்நிலையில், இந்த படத்தின் தயாரிப்பாளர் தங்கராஜ் டூரிங் டாக்கீஸ் என்ற youtube சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், பேட்டியில் வடிவேலு முரளி இருவரும் என்னை டார்ச்சர் பண்ணாங்க. இதனால் படத்தை நிறுத்திவிடலாம் என்கிற முடிவுக்கே வந்துவிட்டேன். அதாவது அவரு கொஞ்சம் சாப்பிடுவாரு சாப்பிட்டால் வேற மாதிரி மாறி விடுவார். வடிவேலும் அப்படித்தான். இவர்கள் இரண்டு பேரும் என்னை டார்ச்சர் பண்ணி என்னை டென்ஷன் ஆக்கிவிட்டார்கள். இதனால், நான் விஜயகாந்தை சந்தித்து விஷயத்தை சொன்னேன். உடனேஅவர், எவன்டா அது எட்றா வண்டிய அப்படி என்று சொல்லி வந்து எவன்டா இது இப்படி செய்வது தொலைத்து விடுவேன் இனி ஏதாவது நடந்தால் என்னிடம் சொல்லு என்று கூறினார்.

விஜயகாந்த் மிரட்டினார்: பின்னர் முரளியை அழைத்து நீ வெள்ளி தட்டில் சாப்பிட்டு இருக்கலாம், ஆனால், இவர் ரொம்ப கஷ்டப்பட்டு இந்த படத்தை எடுக்கிறார். இனி இது போன்ற பிரச்சனை வரக்கூடாது. இது இனி என்னுடைய படம் என கூறிவிட்டு சென்றார்.

தெய்வமாகிவிட்டார்: விஜயகாந்தை பற்றி என்னைத்தவிர வேறுயாரும் நன்கு தெரிந்து இருக்க முடியாது, அவரின் குணம் யாருக்கும் வராது. தேவருக்கு பிறகு விஜயகாந்தை மக்கள் தெய்வமாக வணங்கி வருகின்றனர். இவரை யாரெல்லாம் விமர்சித்தார்களோ அவர்களுக்கு எல்லாம் தண்டனை கிடைக்கும். அவரை நினைத்து ஒருநாளாவது பேசுவார்கள். அரசியலுக்கு வந்த பிறகு அவரை இந்த பத்திரிக்கைகள் பலவிதத்தில் காயப்படுத்தினார்கள், இதை எல்லாம் நினைத்து என்னிடம் பலமுறை அழுது இருக்கிறார். ஆனால், அதை எல்லாம் உடைத்துவிட்டு எம்எல்ஏ ஆனார் என்று சுந்தரா டிராவல்ஸ் தயாரிப்பாளர் விஜயகாந்தை வெகுவாக புகழ்ந்து பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X