Aalavandhan: கடவுள் பாதி.. மிருகம் பாதி.. ஆளவந்தான் ரீ ரிலீஸ்.. தயாரிப்பாளர் தாணு சொல்வது என்ன!

சென்னை: கமல்ஹாசன் நடித்த ஆளவந்தான் படம் திரையரங்கில் மீண்டும் ரீ ரிலீஸாக உள்ளது குறித்து தயாரிப்பாளர் தாணு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமா வரலாற்றிலேயே 400 கோடி ரூபாய் செலவில் 650 திரையரங்குகளில் வெளியான ஒரே திரைப்படம் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ஆளவந்தான் திரைப்படம் தான்.

Producer Thanu interview about Aalavandhan re-release

2001 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில், ரவீனா டாண்டன், மனிஷா கொய்ராலா, அனு ஹாசன் என மற்றும் பலர் நடித்திருந்தனர்.

கமல்ஹாசன்: சித்தியின் கொடுமைகளால் சிறு வயதிலேயே பெண்களை வெறுக்கும் நந்தக்குமார் என்ற கேரக்டரிலும், இராணுவ அதிகாரி கேரக்டர் என இரண்டு விதமான கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார் கமல்.1983 ஆம் ஆண்டு இதயம் பேசுகிறது என்ற இதழில் கமல்ஹாசனால் எழுதப்பட்ட தாயம் என்ற பெயரில் தொடராக வெளிவந்த கதை தான் இந்த ஆளவந்தான்.

Producer Thanu interview about Aalavandhan re-release

motion control camera: இத்திரைப்படத்தில் அதி நவீன டெக்னாலஜியாகக் கருதப்பட்ட motion control camera பயன்படுத்தப்பட்டது. இந்தியாவில் இந்த டெக்னாலஜி முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்ட படம் ஆளவந்தான் படம் தான். படம் வெளியான போது வரவேற்பை பெறாத இத்திரைப்படத்தை பின்னாளில் ரசிகர்கள் கொண்டாடினார்கள். ஆளவந்தான் திரைப்படம் புதுப்பொலிவுடன் 3டி டெக்னாலஜியில் ரீ ரிலீஸ் ஆகும் என்று கடந்த ஆண்டு கமல்ஹாசனின் பிறந்த நாள் அன்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது.

பார்க்க வேண்டிய படம்: இந்நிலையில், தயாரிப்பாளர் தாணு ஆளவந்தான் ரீ ரிலிஸ் குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில், இன்றைய தலைமுறையினருக்கு ஆளவந்தான் படம் ஒரு உத்வேகமாக இருக்கும் என்பதற்காக ரீ ரிலீஸ் செய்கிறேன். அப்பவே லேட்டஸ்ட் டெக்னாலஜியில் அந்தப் படம் வெளியானது. இப்போது இன்னும் நவீன தரத்தில், புதிய சவுண்ட் தொழில்நுட்பத்தில் வெளியாகவிருக்கிறது.

Producer Thanu interview about Aalavandhan re-release

விறுவிறுப்பான வேலை: முதலில் படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ், அதனைத் தொடர்ந்து டீசர், டிரெய்லர் எனப் புதுப்படத்தின் ப்ரொமோஷன் போல, ஒவ்வொன்றாக வெளிவரவிருக்கிறது. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. தியேட்டரில் நாலு வாரத்திற்கு மேல் ஓடக்கூடிய படமாக இப்படம் இருக்கும், அந்த அளவிற்கு இப்படத்திற்கு செலவு செய்யப்போகிறேன் என்று தயாரிப்பாளர் தாணு தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X