Simran: தயாரிப்பாளருக்கு நள்ளிரவில் போன் செய்த நடிகை சிம்ரன்.. அட அப்படியா சங்கதி!
சென்னை: விஐபி படம் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை சிம்ரன். அழகு, நடிப்பு, கவர்ச்சி இவற்றுடன் சிறப்பான நடனத்தையும் கொடுத்து ரசிகர்களை கட்டிப்போட்ட 90களின் கனவுக்கன்னி இவர். இவரது நடிப்பில் வெளியான வாலி, ஒன்ஸ்மோர் உள்ளிட்ட பல படங்கள் தொடர்ந்து இவருக்கு பிஸியான நடிகை என்ற அந்தஸ்தை கொடுத்தன.
தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் இவர் நடித்துள்ளார். பிஸியாக நடித்துக் கொண்டிருந்தபோதே தீபக் பாகா என்பவரை கடந்த 2003ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். தற்போது பிசியான நடிகையாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் சிம்ரன்.

நடிகை சிம்ரன்: தமிழில் விஐபி படம் மூலம் ரசிகர்களுக்கு கிடைத்த பொக்கிஷமாக கொண்டாடப்பட்டவர் நடிகை சிம்ரன். தொடர்ந்து இவருக்கு அமைந்த படங்கள் அனைத்துமே நாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களாகவே இருந்தன. ஒன்ஸ்மோர், நேருக்கு நேர், பூச்சூடவா, துள்ளாத மனமும் துள்ளும், வாலி, ஜோடி என ஏராளமான படங்களில் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர். சிம்ரன் என்றால் நடிப்பு, அழகு, கவர்ச்சி, இடுப்பு என பல விஷயங்கள் நியாபகத்திற்கு வரும். ஆனால் சிம்ரனின் முக்கியமான டேலண்ட்டாக பார்க்கப்படுவது அவரது நடனம். தமிழ் சினிமாவில் விஜய்க்கு டான்ஸில் டஃப் கொடுக்கக்கூடிய நடிகைகளில் சிம்ரனும் ஒருவர்.
சிம்ரன் -தீபக் திருமணம்: விஜய்யுடன் சிம்ரன் இணைந்து ஆட்டம் போட்ட ஆல்தோட்ட பூபதி பாடல் ரசிகர்களின் எவர்கிரீன் ஃபேவரைட். சோர்வான மனதுடன் இருப்பவர்களையும் ஆட்டம் போட வைக்கும் இந்தப் பாடல். தமிழில் 90களில் அஜித், விஜய், விஜயகாந்த், கமல்ஹாசன், சூர்யா, பிரபுதேவா என முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்த சிம்ரன், சமீபத்தில் பேட்ட படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்து விட்டார். தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் இவர் நடித்துள்ளார். சினிமாவில் பிஸியாக இருந்த போது தீபக் பாகா என்பவரை கடந்த 2003ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார் சிம்ரன் இந்த ஜோடிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
நள்ளிரவில் கால் செய்த சிம்ரன்: சிறிது காலங்கள் படங்களில் நடிக்காமல் இருந்த சிம்ரன், தற்போது மீண்டும் பல படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் சப்தம் மற்றும் த லாஸ்ட் ஒன் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில் சிம்ரன் குறித்த ரகசியம் ஒன்றை தயாரிப்பாளர் தாணு நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துள்ளார். சிம்ரனின் முதல் படத்தின் தயாரிப்பாளர் என்ற வகையில் அவர் தன்னுடைய பெருமிதத்தை பகிர்ந்து கொண்டார். மேலும் சிம்ரனுக்கு தான் செய்த உதவி குறித்தும் அவர் மேடையில் பேசியிருந்தார். ஒருநாள் திடீரென தெரியாத நம்பரில் இருந்து தனக்கு போன் வந்ததாகவும் அதை தான் எடுக்காத நிலையில் தனக்கு வாய்ஸ் மெசேஜ் வந்ததாகவும் தாணு தெரிவித்துள்ளார்.
சிம்ரனுக்கு தாணு செய்த உதவி: தான் நடிகை சிம்ரன் என்றும் தனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா என்றும் மெசேஜ் வந்ததாக தெரிவித்த தாணு, இதைத்தொடர்ந்து தான் அந்த நம்பருக்கு கால் செய்து பேசியதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் இரண்டு குழந்தைகளுடன் லண்டனுக்கு வந்து ஹோட்டலில் தங்கி இருந்ததாகவும் ஆனால் நேரம் முடிந்து விட்டதால் உடனடியாக ஹோட்டலை விட்டு காலி செய்யச் சொல்வதாகவும் குழந்தைகளுடன் இருப்பதால் தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்று சிம்ரன் கூறியதாகவும் தாணு தெரிவித்துள்ளார். இதையடுத்து லண்டனில் உள்ள தன்னுடைய நண்பர்களுக்கு அடுத்தடுத்து கால் செய்த தாணு சிம்ரன் அன்று இரவு பாதுகாப்பாக தங்குவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
முதல் பட தயாரிப்பாளர்: தன்னுடைய முதல் படத்தின் தயாரிப்பாளர் என்ற வகையில் தனக்கு சிம்ரன் கால் செய்து உதவி கேட்டது தனக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும் தாணு தெரிவித்துள்ளார். அதே மேடையில் பேசிய சிம்ரன், தாணு தனக்கு உரிய நேரத்தில் உதவி செய்யவில்லை என்றால் தான் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி இருப்பேன் என்று தன்னுடைய நன்றியை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications