எனக்கு அப்போதே தெரியும் படம் ஃப்ளாப் ஆகும்னு.. பாலா பற்றி தயாரிப்பாளர் இப்படி சொல்லிட்டாரே?
சென்னை: பாலா இயக்கத்தில் கடைசியாக வணங்கான் திரைப்படம் வெளியானது. கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கு பிறகு அவர் இயக்கத்தில் படம் வெளியானதால் படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன. முக்கியமாக அவரது வழக்கமான டெம்ப்ளேட்டுக்குள்தான் படம் இருந்ததாக ரசிகர்கள் கூறினார்கள். இந்தச் சூழலில் அவர் குறித்து தயாரிப்பாளர் தேனப்பன் பேசியிருக்கும் விஷயம் ஷாக்கை கொடுத்திருக்கிறது.
இந்திய அளவில் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் பாலா. பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்துவிட்டு சேது படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமான அவர் முதல் படத்திலேயே வெகுவாக கவனம் ஈர்த்தார். அதனைத் தொடர்ந்து அவர் இயக்கிய நந்தா, பிதாமகன், நான் கடவுள் உள்ளிட்ட படங்கள் அவர் மீது மேற்கொண்டு கவனத்தை பெற்று கொடுத்தது. அந்தப் படங்களைத் தொடர்ந்து அவரது இயக்கத்தில் வெளியான படங்கள் யாவும் பெரிதாக சோபிக்கவில்லை.

வணங்கான்: இப்படிப்பட்ட சூழலில் கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்கு பிறகு கடந்த பொங்கலன்று பாலாவின் இயக்கத்தில் வணங்கான் திரைப்படம் வெளியானது. அருண் விஜய் ஹீரோவாக நடித்திருந்த அந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன.மேலும் மாற்று திறனாளிகள் குளிக்கும் காட்சியை அவர் காட்சிப்படுத்தியிருந்த விதம் கடும் கண்டனங்களையும் பெற்றுக்கொடுத்தது. இந்தச் சூழலில் பாலா குறித்தும் அவர் இயக்கிய நான் கடவுள் திரைப்படம் குறித்தும் தயாரிப்பாளர் தேனப்பன் சில விஷயங்களை ஓபனாக பேசியிருக்கிறார்.
தேனப்பன் பேட்டி: தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "பாலா இயக்கத்தில் உருவான நான் கடவுள் படத்தில் முதலில் அஜித்தான் நடிக்க வேண்டியிருந்தது. அதனை நான் முதலில் தயாரித்தேன். அஜித்துக்கும் பாலாவுக்கும் இடையே பிரச்னை வந்ததால் அவர் படத்திலிருந்து விலகிவிட்டார். ஆனால் என்ன பிரச்னை என்று எனக்கு தெரியவில்லை. அஜித் போனதைத் தொடர்ந்து மூன்று ஹீரோக்களின் ஃபோட்டோக்களை என்னிடம் கொடுத்தார் பாலா. அதில் ஆர்யாவும் இருந்தார். நான் ஆர்யாவை செலக்ட் செய்தேன். ஏனெனில் அவரது அப்பாவும் நானும் நெருங்கிய நண்பர்கள்.
காசியில் ஷூட்டிங்: ஐந்தரை கோடிக்குள் படத்தை முடிக்க வேண்டும் என்றுதான் ஒப்பந்தம் போட்டோம். முதற்கட்டமாக பாலாவுக்கு மூன்றரை கோடி ரூபாயை கொடுத்தேன். காட்சியில் 20 நாட்கள் ஷூட்டிங் என்று திட்டமிடப்பட்டது. ஆனால் அங்கேயே 55 நாட்களுக்கு ஷூட்டிங் நடத்தினார் பாலா. நான் அதிகமாகவே பணத்தை செலவழித்தேன். இருந்தாலும் படத்தில் பாதிதான் முடிந்திருந்தது. மேலும் ஷூட்டிங் இருக்கிறது என்றும் சொன்னார். அப்போதுதான் எனக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போதுதான் இந்தப் படத்தை வேறு தயாரிப்பாளருக்கு கைமாற்ற முடிவு செய்து அதன்படி செய்தேன்.
அப்போதே தெரியும்: நான் செலவழித்ததை விடவும் ஒரு கோடி ரூபாய்க்கு அதிகமாக விற்றேன். அந்தப் படம் அந்தத் தயாரிப்பாளரிடம் செல்லும்போதே நான் கடவுள் பயங்கர நஷ்டத்தை கொடுக்கப்போகிறது என்று எனக்கு நன்றாகவே தெரியும். படம் ஆரம்பிக்கும்போதே இது போன்ற பிரச்னைகள் வரும் என்பதால்; ஆர்யாவிடம் நான் இன்னொரு படத்துக்கான தேதிகளையும் அப்போதே வாங்கி வைத்துவிட்டேன். அப்படி அவர் எனது தயாரிப்பில் நடித்து கொடுத்த படம்தான் பாஸ் என்கிற பாஸ்கரன்" என்றார்.


Click it and Unblock the Notifications











