10 கோடி கேட்டாரு.. அசோக் செல்வனுக்கு இப்போ 1 கோடி கொடுக்கக்கூட ஆள் இல்லை.. தயாரிப்பாளர் பகீர்!
சென்னை: கஜானா படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில், பல சர்ச்சைகள் அதை சுற்றி கிளம்பியுள்ளன. நடிகர் யோகி பாபு புரமோஷனுக்கு வராதது குறித்து பேசிய கஜானா படத்தின் தயாரிப்பாளர் யோகி பாபு எல்லாம் சினிமாவில் நடிக்கவே லாயக்கில்லை என்று திட்டியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
படத்தில் நடிக்க மட்டுமே நடிகர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது என்றும் அக்ரிமெண்டில் முதலிலேயே புரமோஷனுக்கும் சேர்த்து ஒப்பந்தம் போட்டிருந்தால் வந்திருப்பாரே என பல விவாதங்கள் வெடித்துள்ளன.

இந்நிலையில், அதே நிகழ்ச்சியில், நடிகர் அசோக் செல்வன் குறித்து 'எமக்குத் தொழில் ரொமான்ஸ்' படத்தின் தயாரிப்பாளர் பேசியதும் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அசோக் செல்வனை வைத்து யாரும் சமீப காலமாக படங்களை பண்ணவே முன் வருவதில்லை என்றும் கூறியுள்ளார்.
10 கோடி கேட்டாரு அசோக் செல்வன்: எமக்குத் தொழில் ரொமான்ஸ் எனும் படத்தை அசோக் செல்வனை வைத்து தயாரிப்பாளர் திருமலை உருவாக்கி இருந்தார். அந்த படத்தை பாலாஜி கேசவன் இயக்கியிருந்தார். ஆனால், அந்த படத்தின் புரமோஷனுக்கு கூட அசோக் செல்வன் செல்லவில்லை என ஏற்கனவே அவர் மீது கோபத்தில் பேசிய திருமலை, நேற்று நடைபெற்ற கஜானா படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில், அசோக் செல்வன் என் படத்துக்கு 10 கோடி கேட்டாரு. இப்போ அவருக்கு 1 கோடி கூட கொடுக்க ஆளில்லை. சினிமாவில் சின்சியர் ரொம்பவே முக்கியம். பெரிய படங்களுக்கு ஒரு மாதிரியும் சிறிய படங்களுக்கு ஒரு மாதிரியும் நடிகர்கள் பாரபட்சம் காட்டி வருகின்றனர் என கடுமையாக பேசியுள்ளார்.
புரமோஷனுக்கே வரல: எமக்குத் தொழில் ரொமான்ஸ் படத்தில் ஹீரோவாக நடித்து விட்டு அசோக் செல்வன் அந்த படத்தின் புரமோஷனுக்கே வரவில்லை என்றும் இந்த கஜானா படத்தில் இனிகோ பிரபாகர் கடுமையாக உழைத்துள்ளார். அவரை தவிர மற்ற ஹீரோக்கள் நடித்தால் ஒரு சண்டைக் காட்சி 25 நாட்களாகி இருக்கும் படமாக்க, ஆனால், சில நாட்களிலேயே இனிகோ பிரபாகர் சின்சியராக செய்து முடித்தார் என பாராட்டினார் திருமலை.

தக் லைஃப் படத்தில் அசோக் செல்வன்: சூது கவ்வும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அசோக் செல்வன் பல நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். தெகிடி, கூட்டத்தில் ஒருத்தன், ஓ மை கடவுளே, நித்தம் ஒரு வானம், போர் தொழில், ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷாவுடன் இணைந்து தக் லைஃப் படத்தில் நடித்துள்ளார். மேலும், கார்த்திக் ராமகிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் அசோக் செல்வனின் 23வது படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிம்பு பாராட்டு: துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி விலகிய நிலையில், தக் லைஃப் படத்தில் சிம்பு மற்றும் அசோக் செல்வன் இணைந்தனர். சமீபத்தில் முஃபாசா படத்திற்கும் வில்லன் சிங்கத்துக்கு குரல் கொடுத்திருந்தார். தக் லைஃப் படப்பிடிப்பு தளத்தில் எப்போதுமே தனக்குத் துணையாக இருந்து சிம்பு பாராட்டிக் கொண்டே இருப்பார் என்றும் தக் லைஃப் புரமோஷன் நிகழ்ச்சியில் அசோக் செல்வன் பேசியிருந்தார்.


Click it and Unblock the Notifications











