பெண் குழந்தைக்கு அப்பாவான ஆர்கே சுரேஷ்.. போட்டோவை பகிர்ந்து மகிழ்ச்சி!
சென்னை: நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்கே சுரேஷ் பெண் குழந்தைக்கு அப்பாவாகியுள்ளார்.
தம்பிக்கோட்டை படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் ஆர்.கே.சுரேஷ்.
இதனை தொடர்ந்து விஜய் ஆண்டனியின் சலீம், விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை போன்ற படங்களை தயாரிதார்.

தாரை தப்பட்டை
கடந்த 2016-ம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான தாரை தப்பட்டை படம் மூலம் நடிகராக அறிமுகமானார் ஆர்கே சுரேஷ். பின்னர் மருது, ஸ்கெட்ச், பில்லா பாண்டி, நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

பாசக்கார நண்பன்
மருது படத்தில் மிரட்டல் வில்லனாக அலற விட்டிருப்பார் ஆர்கே சுரேஷ். அதேபோல் நம்ம வீட்டுப்பிள்ளை படத்தில் சமுத்திரக்கனிக்கு பாசக்கார நண்பனாக நடித்திருப்பார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார் ஆர் கே சுரேஷ்.

நின்று போன திருமணம்
இந்நிலையில் சீரியல் நடிகை திவ்யாவுடன் கடந்த 2017-ம் ஆண்டு சுரேஷுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இவர்களின் திருமணம் நடைபெறாமல் நின்றுபோனது.

பைனான்சியர் மது
இதனை தொடர்ந்து நடிகர் ஆர்.கே. சுரேஷுக்கும், சினிமா பைனான்சியரான மது என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இந்த தம்பதிக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது.

தாயும் சேயும் நலம்
இதனை ஆர்கே சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். எங்கள் வாழ்க்கையில் கிடைத்துள்ள புதிய ஆசீர்வாதத்தைப் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் குடும்பம் பெண் குழந்தையுடன் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. தாயும் சேயும் நலமாக உள்ளனர் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











