“சின்னக்கவுண்டர் 2“… விஜயகாந்த் ரோலில் நடிக்கப்போவது யார் தெரியுமா?
சென்னை : சின்னக்கவுண்டர் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளதாக இயக்குநர் ஆர்.வி உதயகுமார் கடந்த ஆண்டே கூறியிருந்த நிலையில் தற்போது அதற்கான பணிகள் தொடங்கி உள்ளது.
விஜய்காந்த் கதாபாத்திரத்தில் தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்கே சுரேஷ் நடிக்க இருப்பதாக சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இதனை ஆர்.கே.சுரேஷ் தனது பேஸ் புக் பக்கத்தில் உறுதிப்படுத்தி உள்ளார்.

சின்னக்கவுண்டர்
இயக்குனர் ஆர் வி உதயகுமார் இயக்கத்தில் 1991ஆம் ஆண்டு வெளிவந்த படம் சின்ன கவுண்டர். இந்த படத்தில் விஜயகாந்த், சுகன்யா, கவுண்டமணி, மனோரமா, வடிவேல் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்றிருந்த ஒவ்வொரு பாடலும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன.

மிகப்பெரிய வெற்றி
கிராமத்து கதையம்சம் கொண்ட படம் என்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும், இந்த படம் வெளியாகி 100 நாட்களுக்கு மேல் ஓடி மிகப்பெரிய அளவில் வெற்றி தந்திருந்தது. இத்திரைப்படத்தில் சின்னக்கவுண்டர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த விஜய்காந்த் இந்த கதாபாத்திரத்திற்கு கனககச்சிதமாக பொருந்தி இருந்தார். இத்திரைப்படம் விஜய்காந்திற்கு பெயர் சொல்லும் திரைப்படமாக அமைந்தது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தை தெலுங்கிலும், கன்னடத்திலும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றன.

சின்னக்கவுண்டர் 2
சின்னக்கவுண்டர் இரண்டாம் பாகம் தயாரிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டாம் பாகத்தில் விஜய்காந்த் கதாபாத்திரத்தில் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்கே சுரேஷ் நடிக்க இருப்பதாக தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அறிமுகம்
இயக்குனர் பாலாவின் தாரை தப்பட்டை திரைப்படத்தில் வில்லனாக நடித்து திரைத்துறையில் தனது அறிமுகத்தை கொடுத்தார் ஆர்.கே.சுரேஷ். அதன் பின்பு வில்லன் மற்றும் குணசித்திர கேரக்டரில் நடித்து வந்த ஆர்.கே. சுரேஷ், பில்லா பாண்டி திரைப்படத்தின் ஹீரோவாக நடித்தார். தொடர்ந்து பல திரைப்படங்களில் முக்கியமான ரோலில் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











