twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அரசின் அதிரடி உத்தரவு.. ஒரு படைப்பாளியாக ரொம்பவே மகிழ்ச்சியடைகிறேன்.. சுரேஷ் காமாட்சி நெகிழ்ச்சி!

    |

    சென்னை: முதல்வர் பாதுகாப்பு பணியில் ஈடுபட பெண் போலீஸாருக்கு விலக்கு அளித்ததற்காக தமிழக அரசுக்கு 'மிக மிக அவசரம்' படத்தின் இயக்குநர் சுரேஷ் காமாட்சி நன்றி கூறியுள்ளார்.

    கடந்த 2019ஆம் ஆண்டு சுரேஷ் காமாட்சி இயக்கி, தயாரித்து வெளியான படம் 'மிக மிக அவசரம்'. இந்தப் படம் பெண் போலீஸார் படும் இன்னல்களை பேசும் படமாக இப்படம் இருந்தது.

    ஒரே ஒரு தொப்பி தான்.. ஆடையேதும் அணியாமல் ஒட்டுமொத்த ரசிகர்களை ஆட்டம் காண வைத்த பிரபல நடிகை!ஒரே ஒரு தொப்பி தான்.. ஆடையேதும் அணியாமல் ஒட்டுமொத்த ரசிகர்களை ஆட்டம் காண வைத்த பிரபல நடிகை!

    இந்நிலையில் தமிழக அரசு முதல்வர் பாதுகாப்பு பணியில் பெண் போலீசாருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் விலக்கு அளித்து அறிவிப்பு வெளியிட்டார்.

    மிக மிக அவசரம்

    மிக மிக அவசரம்

    மிக மிக அவசரம் படத்திலும் ஒரு அரசியல்வாதிக்கு பாதுகாப்பு வழங்க அறிவுறுத்தப்பட்ட ஒரு பெண் காவலரின் போராட்டங்கள் சொல்லப்பட்டிருந்தது. தற்போது தமிழக அரசின் அறிவிப்புக்கு, அப்படத்தின் இயக்குநரான சுரேஷ் காமாட்சி நன்றி தெரிவித்துள்ளார்.

    சின்ன சிக்கல் பெரிய வலி

    சின்ன சிக்கல் பெரிய வலி

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, "பெண் போலீஸாரின் பெருந்துன்பங்களில் ஒன்று பிரபலங்கள் வரும்போது பாதுகாப்பிற்காகச் சாலைகளில் நிற்பது. அதிலென்ன இருக்கிறது எனச் சாதாரணமாகக் கடந்து போகும்போது, ஒரு சின்ன சிக்கல் எவ்வளவு பெரிய வலியையும் அவஸ்தையையும் தருகிறது என்பதை 'மிக மிக அவசரம்' படத்தில் சொல்லியிருந்தோம்.

    பெருமை கொள்கிறேன்

    பெருமை கொள்கிறேன்

    ரொம்ப சின்ன கதைக் கருதான். ஆனால், அதன் பின்னிருந்த அழுத்தமான வலி பெரும் வெற்றியைத் தந்தது. திரையரங்கில் ஓடியதைவிட, இன்று இந்த அறிவிப்பால் உண்மையாகவே பெருமைகொள்கிறேன். மகிழ்கிறேன்.

    முதல்வருக்கு நன்றி

    முதல்வருக்கு நன்றி

    பெண் போலீஸார் சாலையோரப் பாதுகாப்பில் ஈடுபட வேண்டாம் என அறிவித்திருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும், டிஜிபிக்கும் மனமுவந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சுரேஷ் காமாட்சி நன்றி

    சுரேஷ் காமாட்சி நன்றி

    இப்படைப்பிற்கு கதை எழுதிய இயக்குநர் ஜெகன்னாத், நடித்த பிரியங்கா, அரீஷ் குமார், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான், இயக்குநர் சேரன், படத்தை வெளியிட்ட லிப்ரா ரவீந்தர் சந்திரசேகரன், இணைந்து தயாரித்த குங்ஃபூ ஆறுமுகம், ஒளிப்பதிவாளர் பாலபரணி, எடிட்டர் சுதர்சன், இசையமைப்பாளர் இஷான் தேவ், பிஆர்ஓ ஜான் அனைவருக்கும் நன்றிகள்.

    பெருமை கொள்கிறேன்

    பெருமை கொள்கிறேன்

    படைப்பு என்பது பொழுதுபோக்குக்காக மட்டுமல்ல, அதைத் தாண்டி சமூகத்தில் என்ன மாற்றத்தை உருவாக்குகிறது என்பது மிக முக்கியம். அந்த வகையில் 'மிக மிக அவசரம்' படம் எடுத்தற்காக உண்மையாகவே பெருமைகொள்கிறேன்". இவ்வாறு சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

    English summary
    Producer-turned-director Suresh Kamatchi thanks to CM Stalin. Suresh Kamatchi's Miga Miga avasaram movie reflects in CM's order.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X