twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கசிந்தது பாக்ஸர் பட கதை.. முதலில் கஷ்யப்.. கடைசியில் அருண் விஜய்க்கு வில்லன் ஆனது யார் தெரியுமா?

    |

    சென்னை: அருண் விஜய், ரித்திகா சிங் நடிப்பில் உருவாகி வரும் பாக்ஸர் படத்தின் மொத்த கதையும் கசிந்து விட்டது.

    அசுர மோடில் இந்த படத்திற்காக அருண் விஜய் ரெடியாகி இருந்தார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வேற லெவலில் தமிழ் சினிமா ரசிகர்களை மிரட்டியது.

    இந்த படத்தை இயக்குநர் விவேக் இயக்கி வருகிறார். அனுராக் கஷ்யப்பை வில்லனாக நடிக்க வைக்க முதலில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    அனுராக் கஷ்யப்

    அனுராக் கஷ்யப்

    முரட்டுத்தனமான எம்.என்.எம் ஃபைட்டர் கதையை இயக்கி வரும் விவேக், அருண் விஜய் மற்றும் ரித்திகா சிங்கை இந்த படத்திற்கு தேர்வு செய்தது பலரது பாராட்டுக்களை அள்ளியது. நயன்தாராவின் இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்த பிரபல பாலிவுட் நடிகர் அனுராக் கஷ்யப்பை இந்த படத்தில் வில்லனாக நடிக்க வைக்க தயாரிப்பு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

    காக்க வைக்க வேண்டாம்

    காக்க வைக்க வேண்டாம்

    ஆனால், பாக்ஸர் படத்திற்கு வில்லனாக அனுராக் கஷ்யப்பை கொண்டு வர நடத்தப்பட்ட முயற்சிகள் சில காரணங்களுக்காக தோல்வியை தழுவியதாக அந்த படத்தின் தயாரிப்பாளர் மதி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். பாக்ஸர் படத்தில் மூன்று வித்தியாசமான லுக்கில் அருண் விஜய் நடித்து வருவதால், ஏற்படும் கால தாமதம் காரணமாக அனுராகை காக்க வைக்க வேண்டாம் என முடிவு எடுக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

    யார் வில்லன்

    யார் வில்லன்

    இந்நிலையில், பாக்ஸர் படத்தின் வில்லன் யார் என்ற தகவலை தயாரிப்பாளரே தெரிவித்துள்ளார். வேறு யாரும் இல்லைங்க, பாக்ஸர் பட தயாரிப்பாளர் மதி தான் வில்லனாம். மேலும், ஹீரோவாக நடன இயக்குநர் பாபி ஆண்டனி இயக்குநராக அறிமுகமாகும் படத்திலும் நடித்து வருகிறார் மதி.

    7ஆம் அறிவு வில்லன்

    7ஆம் அறிவு வில்லன்

    மேலும், இந்த படத்திற்கு சூர்யாவின் 7ஆம் அறிவு படத்தில் வில்லன் டாங்லியாக நடித்த ஜானி ட்ரி நியூகன் ஸ்பெஷல் சண்டை பயிற்சிகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது. அருண் விஜய் ரத்தகளறியாக சண்டையிடுவது போல் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்ததும் இவரது வேலை புரிந்தது.

    ட்ராப் ஆனதா?

    ட்ராப் ஆனதா?

    இந்நிலையில், பாக்ஸர் படம் அப்படியே ட்ராப் ஆனதாகவும், அந்த படத்தின் ஷூட்டிங்கை தயாரிப்பு தரப்பு தொடங்காது என்றும் வதந்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளர் மற்றும் அருண் விஜய் தங்கள் தரப்பில் இருந்து படம் ட்ராப் ஆகவில்லை. வதந்திகளை நம்ப வேண்டாம், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என தெரிவித்துள்ளனர்.

    Recommended Video

    தலைகீழாக விழுந்த Victor Arun Vijay terrific workout | Mafia, Yennai Arindhal, Sinam
    லீக்கான கதை

    லீக்கான கதை

    மேலும், TOIக்கு சமீபத்தில் பேட்டியளித்த இந்த படத்தின் தயாரிப்பாளரும் வில்லன் நடிகருமான மதி, பாக்ஸர் படத்தில், அருண் விஜய்யை எதிர்த்து சண்டையிடும் ஆளாக தான் நடிக்க வில்லை என்றும், அவருடைய மேனேஜராக நடித்துள்ளதாகவும், தனது பேச்சை கேட்காமல், முடிவெடுக்கும் நிலையில், தான் அவருக்கு வில்லனாக மாறுவதாகவும் ஒட்டுமொத்த கதையையும் கசியவிட்டு இருக்கிறார்.

    English summary
    After Boxer movie dropped rumour rounds in social media. Now latest buzz about the film is, Mathi, who is producing Arun Vijay’s Boxer, will be playing the antagonist in the film
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X