Don't Miss!
- News
எகிறும் எடப்பாடி.. பாஜகவை கழற்றிவிட்ட அதிமுக? ஈரோடு தேர்தல் பணிமனையில் மோடி படம், பாஜக கொடி மிஸ்ஸிங்
- Lifestyle
கேந்திர திரிகோண ராஜயோகத்தால் பிப்ரவரி 7 முதல் இந்த ராசிகளுக்கு தொழிலில் அமோக வெற்றி கிடைக்க போகுது..
- Finance
Budget 2023: பட்ஜெட் எதிரொலி.. சென்செக்ஸ் 1100 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்..!
- Automobiles
இதுகளோட வருகைக்குதான் ரொம்ப நாளா வெயிட் பண்றோம்! டூவீலர் லவ்வர்ஸ்க்கு இந்த மாசம் செம்ம தீனி காத்திட்டு இருக்கு
- Sports
அடுத்த விக்கெட்டும் காலி.. ஆஸி,டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு பெரும் அடி.. என்ன செய்யப்போகிறார் ரோகித்
- Technology
மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
நாங்க என்ன அவ்வளவு கேவலமா...சரண்யா பொன்வண்ணனை கிழி கிழி என கிழித்த தயாரிப்பாளர்!
சென்னை : அருவா சண்ட பட ப்ரோமோஷனில், கெஞ்சி கேட்டும் கலந்து கொள்ளாத சரண்யா பொன்வண்ணனை கிழி கிழி என கிழித்து பேசி உள்ளார் படத்தின் தயாரிப்பாளர் வி ராஜா.
ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் பட நிறுவனம் சார்பில் வி.ராஜா தயாரித்து ஹீரோவா நடித்துள்ள திரைப்படம் அருவா சண்ட.
சிலந்தி, ரணதந்த்ரா, நினைவெல்லாம் நீயடா ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன் இப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படம் டிசம்பர் 30ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.
அருவா
ப்ராஜெக்ட்டை
மீண்டும்
கையில்
எடுக்கும்
சூர்யா...
வணங்கானை
கைவிட
இதுதான்
காரணமா?

அருவா சண்ட
அருவா சண்ட படத்தின் செய்தியாளர் சந்திப்பில் சரண்யா பொன்வண்ணன் குறித்து ஆவேசமாக தயாரிப்பாளர் வி.ராஜா அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை வைத்துள்ளார். இதில், இந்த படத்தோட பலமே அவங்தான், ஹீரோயின்கூட கொஞ்சம்தான் இந்த படத்தோட, கதாநாயகன், கதாநாயகி எல்லாமே சரண்யா மேடம் தான். படத்தின் ப்ரோமோஷன் விழா இருக்கு வாங்க என்று நான் மற்றும் இயக்குநரும் அவரிடம் கேட்டோம், ஷூட்டிங் இருக்கு போகிறேன் என்றார்கள். ஷூட் இல்லை என்றால் வாங்க மேடம் என்றோம்.

கெஞ்சி கேட்டும் வரவில்லை
ஆனால், இன்னைக்கு அவங்களுக்கு ஷூட்டிங் இல்லை. கிறிஸ்துமஸ் கொண்டாடுவதாக சொல்கிறார்கள். இதை நான் தவறாக சொல்லவில்லை, இந்த இடத்தில் தனுஷ் அல்லது சூர்யா சார் படமோ, இல்லை பெரிய நடிகரின் படமாக இருந்து இருந்தால் அவங்க இந்த பதிலை சொல்லி இருப்பாங்களா?

நாங்க என்ன அவ்வளவு கேவலமா?
சிறு படதயாரிப்பாளரை ஏன் இவ்வளவு கேவலமா பார்க்குறீங்க? இவ்வளவு நசுக்குறீங்க? நாங்க எல்லாம் சினிமா எடுக்க கூடாதா.. சினிமாவில் நாங்க நடிக்க கூடாதா.. நாங்க எல்லாம் கலைத்துறைக்கு வரக்கூடாதா...தமிழ் சினிமாவை நம்பித்தான் இங்கே, எல்லாரும் வருகிறார்கள். இந்த மண்ணில் பிறந்து, இந்த மண்ணில் வர நினைக்கிறோம். நீங்களே எங்களை ஏன் ஒதுக்குகிறீங்க...எங்களை ஏன் இவ்வளவு கஷ்டப்படுத்துறீங்க.

எங்களை காயப்படுத்தலாமா?
இந்த படத்தை எப்படியாவது திரையரங்கில் கொண்டுவர வேண்டும் என்று இரவு பகலா கஷ்டப்பட்டு போராடிக்கொண்டு இருக்கிறோம் எங்கள் வலி, எங்கள் வேதனை தெரிந்தும் எங்களை காயப்படுத்தலாமா? படத்தின் விளம்பரத்திற்கு வாங்க உதவுங்கள் என்று தான் கேட்கிறோம். வரவில்லை என்றால் கூட, அன்பான ஆதரவான வார்த்தைகளை சொல்லுங்க. அதை விட்டு விட்டு எங்களை ஏன் நசுக்காதீங்க.

பாரபட்சம் பார்க்காதீர்கள்.
கார் அனுப்புறேன் வாங்க மேடம், எங்களுக்கும் சப்போர்ட் பண்ணுங்க மேடம் என்று கொஞ்சினேன் ஆனாலும் நீங்கள் வரவில்லை. காரணம், என் தரம் அவ்வளவு தான் நடிகரும், தயாரிப்பாளருமா ராஜா வேதனையுடன் அந்த விழாவில் பேசி உள்ளார். தயவு செய்து சிறு தயாரிப்பாளர், பெரிய தயாரிப்பாளர், புதியவன், பழையவன் என்று பாரபட்சம் பார்க்காதீர்கள். மற்றபடி இங்கு வந்திருந்து வாழ்த்திய தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி என்றார்.