ஓடிடியில் ரிலீஸ் ஆகிறதா மாஸ்டர் திரைப்படம்? படத்தின் தயாரிப்பாளர் முக்கிய தகவல்!

சென்னை: நடிகர் விஜயின் மாஸ்டர் படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் படத்தின் தயாரிப்பாளரான சேவியர் பிரிட்டோ அது குறித்து பேசியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் மாஸ்டர். விஜய், விஜய் சேதுபதி முதல் முறையாக இந்தப் படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக வேண்டிய இப்படம், லாக்டவுன் காரணமாக போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடைபெறாத காரணத்தால் தள்ளி போனது.

ரசிகர்கள் காத்திருப்பு

ரசிகர்கள் காத்திருப்பு

தற்போது மீண்டும் போஸ்ட் புரடெக்ஷன் பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ளதை தொடர்ந்து படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளது. மாஸ்டர் படத்தின் ட்ரெயிலர் மற்றும் டீசருக்காக ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர்.

ஓடிடியில் படங்கள்

ஓடிடியில் படங்கள்

ஆனால் ட்ரெயிலர் ரிலீஸ் குறித்து இதுவரை ஒரு தகவல் கூட அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. ஆனால் படம் குறித்து அவ்வப்போது ஏதாவது ஒரு தகவல் வெளியான வண்ணம் உள்ளன. தற்போது லாக்டவுன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் பல படங்கள் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி வருகிறது.

ஓடிடியில் மாஸ்டர்?

ஓடிடியில் மாஸ்டர்?

இந்நிலையில் மாஸ்டர் படமும் அதுபோன்று ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகவுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. ஆனால் படக்குழுவை சேர்ந்த பலரும் மாஸ்டர் படம் ஓடிடியில் ரிலீஸ் ஆக வாய்ப்பில்லை என தெரிவித்து வருகின்றனர்.

தியேட்டரில் தான்

தியேட்டரில் தான்

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளரும் நடிகர் விஜயின் மாமாவுமான சேவியர் பிரிட்டோ படத்தின் ரிலீஸ் குறித்து பேசியிருக்கிறார். மாஸ்டர் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள அவர், என்ன நடந்தாலும் அப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் என தெரிவித்துள்ளார்.

படக்குழு காத்திருக்கிறது

படக்குழு காத்திருக்கிறது

கொரோனா லாக்டவுன் பிரச்சனையை பொறுத்தே படம் ரிலீஸ் செய்யப்படும் என்றும் அது பொங்கலுக்கா அல்லது தீபாவளிக்கா என்று தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்வதற்காகதான் படக்குழு காத்திருக்கிறது என்றும் பிரிட்டோ தெளிவாக தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X