»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழ்ப்படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கக் கோரி சென்னை டி.வி. அலுவலகம்முன்பு வருகின்ற 23-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக தமிழ்த் திரைப்படதயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் இப்ராஹிம் ராவுத்தர் அறிவித்துள்ளார்.

இது குறித்து, தமிழ்ப் படத்தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் இப்ராஹிம் ராவுத்தர்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஆயிர்கணக்கான அரசுப் பணிகள் இருந்தாலும் அதன் நடுவே கலை உலகின் மீதும்,தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் மீதும் நமது தமிழக முதல்வர் கலைஞர் எந்தஅளவு அன்பும், பாசமும் வைத்துள்ளார் என்பதற்கு இன்னொரு உதாரணமாக வட்டாரமொழிப் படங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று தமிழக முதல்வர் மத்தியசெய்தித் துறை அமைச்சருக்கு பத்திரிக்கைகள் மூலம் தந்துள்ள அறிக்கை விளக்குகிறது.

பிரசார் பாரதி நிறுவனத்தின் புதிய முடிவு இந்தியாவில் உள்ள வட்டாரமொழிகளுக்கிடையே பாகுபாட்டை ஏற்படுத்திவிடும். எனவே இந்த முடிவைஉடனடியாக திரும்பப் பெற்று ஒளிபரப்பில் தமிழ் மொழித் திரைப்படங்களுக்கும்முக்கியத்துவம் தர வேண்டும் என்று செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர்சுஷ்மா ஸ்வராஜ் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ள தமிழக முதல் அமைச்சருக்குதமிழ்ப் படத்தயாரிப்பாளர்கள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

திரைத்துறையின் வளர்ச்சிக்காக பல நல்ல திட்டங்களைத் தீட்டியுள்ள மத்திய அமைச்சர்சுஷ்மா ஸ்வராஜ் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு நல்ல முடிவை எடுக்கவேண்டுகிறோம்.

இல்லையென்றால் ஆட்சிப் பொறுப்பிற்கு யார் வந்தாலும் வடக்கு வாழ்கிறது தெற்குதேய்கிறது என்ற எண்ணத்திற்கு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள்தள்ளப்படுவார்கள்.

அந்த நிலை வராமல் இருக்க மத்திய செய்தித்துறை அமைச்சர் உடனடியாகநடவடிக்கை எடுத்து தென்னிந்தியப் பட உலகையும் தமிழ்ப்பட உலகையும்வேண்டுகிறோம்.

பிரசார் பாரதி நிறுவனத்தின் இந்த புதிய முடிவால் ஏற்கனவே பல நெருக்கடிகளால்தடுமாறிக் கொண்டிருக்கும் தமிழ்ப்பட உலகம் இன்னமும் மோசமான விளைவுகளைச்சந்திக்கும் என்பதால் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வரும் 20-ம் தேதிக்குள்மாற்று அறிவிப்பு வெளியிட்டு எல்லா மொழிப் படங்களுக்கும் டெலிவிஷனில் ஒரேமாதிரியான பிரதிநிதித்துவம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டுகிறோம்.

இல்லையென்றால் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் தங்கள் கருத்தை வலியுறுத்திவரும் 23-ம் தேதி காலை 11 மணிக்கு சென்னையில் உள்ள தொலைக்காட்சிஅலுவலகம் முன்பு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள். இவ்வாறுதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் இப்ராஹிம் ராவுத்தர்அறிவித்துள்ளார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil