விவசாயிகள் மாதிரியே ஆயிடுச்சு தயாரிப்பாளர்கள் நிலைமையும்.. ஃபீல் பண்ணும் பிரகாஷ் ராஜ்!
விவசாயிகளைப் போல் தயாரிப்பாளர்கள் நெருக்கடியான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர் என நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.
கோவை: விவசாயிகளைப் போல் தயாரிப்பாளர்கள் நெருக்கடியான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர் என நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் அசோக்குமார் கடன் நெருக்கடியால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கந்துவட்டி கொடுமையை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ் கந்துவட்டிக் கொடுமையால் தமிழ் சினிமாவில் ஏராளமானோர் தற்கொலை செய்துகொண்டனர் என்றார். கருப்பு பணம் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இனியும் கந்துவட்டிக் கொடுமை தொடரக்கூடாது என்றும் அவர் கூறினார். மேலும் விவசாயிகளைப் போல் தயாரிப்பாளர்கள் நெருக்கடியான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றும் பிரகாஷ் ராஜ் கவலை தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











