twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இது எப்ப சரியாகும்னு தெரியாது.. ஹீரோக்கள் சம்பளத்துல 50% குறைக்கணும்.. தயாரிப்பாளர் கோரிக்கை!

    By
    |

    கொச்சி: ஹீரோக்களும் டெக்னீஷியன்களும் தங்கள் சம்பளத்தில் பாதியை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

    Recommended Video

    கொரோனா முடியட்டும்..படத்தில் நடிக்க காத்திருக்கும் விஜய் மகன்

    கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் கடும் பாதிப்பை சந்தித்துவருகிறது. இதற்கு உலகம் முழுவதும் 26 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த வைரஸுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாததால் பல்வேறு நாடுகள் ஊரடங்கை கடைபிடித்து வருகின்றன. மருந்து கண்டுபிடிக்கும் பணிகளில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

    கடவுள் போய் சூறாவளி ஆகிட்டாங்க போல.. வைரலாகும் ஊர்வசி ரவுத்தேலாவின் தாறுமாறு வீடியோ!கடவுள் போய் சூறாவளி ஆகிட்டாங்க போல.. வைரலாகும் ஊர்வசி ரவுத்தேலாவின் தாறுமாறு வீடியோ!

    வேகமாகப் பரவுகிறது

    வேகமாகப் பரவுகிறது

    இந்த தொற்று இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் அடைந்து கிடக்கின்றனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் நடிகர், நடிகைகளும் வீடுகளுக்குள் இருக்கின்றனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23,077 ஆக உயர்வடைந்துள்ளது. பலி எண்ணிக்கை இன்று 718 ஆக உயர்வடைந்து உள்ளது.

    சினிமாதுறை

    சினிமாதுறை

    இதன் காரணமாக பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. பல்வேறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கான சம்பளத்தை குறைத்துள்ளது. சில நிறுவனங்கள் சம்பளத்தை நிறுத்திவிட்டன. ஆட்குறைப்பும் நடந்து வருகிறது. பலர் வேலை இழந்துள்ளனர். திரைப்படத்துறை கடும் பாதிப்பை சந்தித்துள்ளது.

    தயாரிப்பாளர் சங்கம்

    தயாரிப்பாளர் சங்கம்

    பல படங்களின் ரிலீஸ் தள்ளிப்போய்விட்டது. படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. பைனான்ஸ் வாங்கி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தயாரிப்பாளர்கள் வட்டி கட்ட முடியாத நிலை ஏற்பட் டுள்ளது. இந்நிலையில் கேரளத் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், நடிகர், நடிகைகளும் டெக்னீஷியன்களும் தங்கள் சம்பளத்தில் பாதியை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.

    சம்பளம்

    சம்பளம்

    லாக்டவுன் முடிந்து பணிகள் மீண்டும் தொடங்கும் போது, நடிகர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் 50 சதவிகிதம் குறைவாகச் சம்பளத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் கோரியுள்ளது. ஈஸ்டர், ரம்ஜானையொட்டி, சுமார் 7 மலையாள படங்கள் ரிலீஸ் ஆவதாக இருந்தன. அதோடு, 26 படங்களின் தயாரிப்பு பணிகளும் முடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

    மீள வேண்டும்

    மீள வேண்டும்

    இந்நிலையில் மலையாள சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் சுரேஷ் குமார் கூறும்போது, 'இயல்பு நிலை எப்போது திரும்பும் என்பது தெரியவில்லை. லாக்டவுன் முடிந்து சினிமா மீள வேண்டும் என்றால், நடிகர்களும், டெக்னீஷியன்களும் அவர்களது சம்பளத்தில் 50 சதவிகிதத்தைக் குறைக்க வேண்டும்' என்று கூறியுள்ளார். கேரள சினிமாவில் முன்னணி நடிகர்களாக, மம்மூட்டி, மோகன்லால் உள்ளனர்.

    English summary
    Kerala film producer’s association has requested its actors and technicians to reduce their fees by 50 percent when the lockdown is lifted and the working in the industry gets back to normal.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X