தனுஷை சுற்றி வளைத்த தயாரிப்பாளர் சங்கம்.. நடிகர் சங்கத்தை கண்டித்து அறிக்கை!
சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கம், நடிகர் தனுஷ் மீது தமிழ் திரைப்படத் தயாரிப்பளர்கள் சங்கம் எந்த வித புகாரும் அளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்கள் அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது எனது தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
நடிகர்கள் விஷால் மற்றும் தனுஷ் ஆகியோருக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் புதிய படம் நடிக்க கட்டுப்பாடுகள் விதித்த நிலையில், சென்னை தி.நகரில் நடிகர் சங்கம் சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில், திரைத்துறையில் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் நல்ல உடன்பாட்டில் தொடர்ந்து பணியாற்றுகிறோம். இதற்கு முன் நடிகர் சார்ந்த பிரச்சனைகளாக இருந்தாலும், தயாரிப்பாளர் சார்ந்த பிரச்சனைகளாக இருந்தாலும் இரு குழுக்கள் அமைத்து தான் முடிவுகள் எடுக்கப்பட்டது.

தென்னிந்திய நடிகர் சங்கம்: ஆனால், தயாரிப்பாளர் சங்கம் யாரிடமும் கலந்து ஆலோசிக்காமல் அறிக்கை வெளியிட்டுள்ளனர். தயாரிப்பாளர் சங்கம் திடீரென எடுத்த முடிவு மிகவும் வருத்தம் அளிக்கிறது. ஆனால், இந்த பிரச்சினை குறித்து அவர்கள் அளித்த புகார் எதுவும் எங்களிடம் வரவில்லை. எழுத்துப் பூர்வமாக புகார் எதுவும் வராத நிலையில், திடீரென அவர்கள் அறிக்கையை வெளியிட்டது ஆச்சரியமாக இருக்கிறது. அதற்கான விளக்கத்தையும் நாங்கள் எங்கள் அறிக்கையில் கேட்டிருக்கிறோம் என தெரிவித்திருந்தார்.
தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை: இதற்கு பதில் அறிக்கை வெளியிட்டுள்ள தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், நடிகர் தனுஷ் மீது தமிழ் திரைப்படத் தயாரிப்பளர்கள் சங்கம் எந்த வித புகாரும் அளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்கள் அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. ஓராண்டுக்கு முன்பு தமிழ்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுவில் தயாரிப்பாளர்களுக்கு பிரச்சனை மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுத்தும் முக்கிய 5 நடிகர்கள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அந்த தகவலை தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தெரியப்படுத்தினோம்.
பாதுகாக்க வேண்டியது அவசியம்: 1.11.2024 முதல் படப்பிடிப்புகள் முழுமையாக நிறுத்தி திருத்தி அமைக்கப்பட விதிமுறைகளுடன் தொடர தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தமிழ்நாடு திரைப்பட விநிதியோகஸ்தர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் அடங்கிய கூட்டமைப்பு சேர்ந்து எடுத்த தீர்மானத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்கள். இந் சூழ்நிலையில் முதல் போட்டு திரைப்படம் எடுக்கும் தயாரிப்பாளர்களை பொருளாதார நெருக்கடியிலிருந்து பாதுகாக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு உள்ளது.
கனத்த இதயத்துடன் எடுத்த முடிவு: நடிகர்கள், சம்பளம் மற்றும் படப்பிடிப்பு செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்ற காரணத்தினால், மேலும் மேலும் நஷ்டத்தை எதிர்கொள்ள தயாரிப்பாளர்கள் இயலவில்லை. மேலும் கடந்த 6 மாத காலத்தில் தயாரிப்பாளர்கள் , தங்களது திரைப்படங்களை வியாபாரம் செய்ய ஓடிடி தளம் மற்றும் சேட்டிலைட் என அனைத்து வியாபார தளங்களிலும் பொருளாதார ரீதியாக மிகவும் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படுவதை கருத்தில் கொண்டு அவர்களை காப்பாற்றிடவும், எதிர்கால தயாரிப்பாளர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் மேற்கண்ட தீர்மானங்களை கனத்த இதயத்துடன் எடுக்கப்பட்டது. இதை புரிந்து கொண்டு நடிகர் சங்கமும் தகுந்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் அந்த அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications











