விஷால் சஸ்பெண்ட் ரத்து: தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு
சென்னை: தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நடிகர் விஷாலை சஸ்பெண்ட் செய்ததை சங்கம் ரத்து செய்துள்ளது.
பத்திரிகைப் பேட்டியில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை தவறாகப் பேசியதாகக் கூறி நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

தயாரிப்பாளர் சங்க அவசரக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. இந்த முடிவை எதிர்த்து விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதற்கிடையே அவர் தயாரிப்பாளர் சங்கத்திடம் மன்னிப்பும் கோரினார். விஷாலின் வழக்கை விசாரித்த நீதிமன்றம் தனது உத்தரவில் நேற்று கூறியிருந்ததாவது,
விஷால் மீது எடுக்கபட்ட நடவடிக்கையை தயாரிப்பாளர் சங்கம் தானாக முன் வந்து ரத்து செய்ய வேண்டும். விஷால் கூறிய கருத்தை மிகைபடுத்தி புரிந்து கொண்டுள்ளது தயாரிப்பாளர் சங்கம். ரத்து செய்யவில்லை என்றால் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும். இதற்கு ஒரு நாள் கெடு விதிக்கிறோம் என்றது.
இந்நிலையில் விஷாலின் சஸ்பெண்டை தயாரிப்பாளர் சங்கம் ரத்து செய்து இன்று அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











