twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஸ்ட்ரைக்கை வாபஸ் பெற, தயாரிப்பாளர் சங்கம் வைக்கும் 5 கோரிக்கைகள்!

    By Vignesh Selvaraj
    |

    Recommended Video

    சினிமா ஸ்ட்ரைக் முடியுமா?..முடியாதா?- வீடியோ

    சென்னை : கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் நடைபெற்று வரும் திரையுலகினரின் ஸ்ட்ரைக் மிக விரைவில் முடிவுக்கு வரும் என்று கூறப்படுகிறது. ஏனெனில், இன்னும் ஸ்ட்ரைக் இழுத்துக்கொண்டே போனால் திரையுலகினருக்கும் பெரிய சிக்கல் ஏற்படும்.

    தயாரிப்பாளர் சங்கத்தின் 5 முக்கிய கோரிக்கைகளை திரையரங்க உரிமையாளர்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டால், அதற்கு அடுத்தநாளே வேலைநிறுத்தம் முடிவுக்கு வரும் என்று விஷால் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    தியேட்டர்களில் டிக்கெட்டுகள் வழங்குவதை கம்ப்யூட்டர் மயமாக்குவது உள்பட ஒருசில கோரிக்கைகளை திரையரங்கு உரிமையாளர்கள் ஒப்புக்கொண்டதாகவும் இதுகுறித்த இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை மிக விரைவில் நடைபெறும் என்றும், அதன்பின்னர் வேலைநிறுத்தம் முடிவுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.

    ஆன்லைன் கட்டணத்தை குறைக்க வேண்டும்

    ஆன்லைன் கட்டணத்தை குறைக்க வேண்டும்

    தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தியேட்டர் உரிமையாளர்களுக்கு முன்வைக்கப்பட்டுள்ள 5 முக்கியக் கோரிக்கைகள் : 1. மக்களிடம் டிக்கெட் கட்டணத்திற்கு மேல் அதிகமாக வாங்கும் ஆன்லைன் கட்டணத்தை குறைக்க வேண்டும்.

    அனைத்து தரப்பினரும் பார்க்க

    அனைத்து தரப்பினரும் பார்க்க

    2. டிக்கெட் கட்டணத்தைக் குறைத்து ஏழை, நடுத்தர, உயர்தர மக்கள் மூன்று தரப்பினரும் படம்பார்க்க டிக்கெட் கட்டணத்தை முன்பு இருந்ததுபோல் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, மூன்றாவது வகுப்பு என முறைபடுத்த வேண்டும்.

    ப்ரொஜெக்டர்

    ப்ரொஜெக்டர்

    3. தயாரிப்பாளர்கள் முன்பு தியேட்டர்களுக்கு பிரின்ட் தந்ததுபோல் தற்போது படத்தை மாஸ்டிரிங் செய்து கண்டென்ட் தருகிறோம் . ப்ரொஜக்டர் வைத்து திரையிடுவது திரையரங்க உரிமையாளர்களின் பொறுப்பு. க்யூப் சிஸ்டத்தை தவிர்க்கவே இந்த ஏற்பாடு.

    உண்மையான வசூல்

    உண்மையான வசூல்

    4. அனைத்து தியேட்டர்களிலும் கம்ப்யூட்டர் பொருத்தப்பட்டு அனைவருக்கும் உண்மையான வசூலை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். அவ்வாறு செய்யப்படும்போது அந்தப் படத்தின் வசூல் உண்மையிலேயே குறைவாக இருந்தால் அதற்கு ஏற்றார்போல் நடிகர்கள் மற்றும் டெக்னீசியன்களின் சம்பளம் குறைக்கப் படவேண்டும்.

    நேரடியாக ஒப்பந்தம்

    நேரடியாக ஒப்பந்தம்

    5. ஒவ்வொரு ஏரியாவிலும் சில நபர்களால் 80% தியேட்டர்கள் கையகப்படுத்தப்பட்டு தயாரிப்பாளர்களுக்கு முறையாக கிடைக்க வேண்டிய தியேட்டர்கள் தடுக்கப்படுவதும் திரையிடும் தியேட்டர்களில் தரப்படும் டெபாஸிட் பணம் கொடுக்கப்படாமலும் தனிநபர்களால் செய்யப்படுகிறது. மற்றும் வசூல் தொகையில் மிகக்குறைவான சதவீதம் பணமே ஷேர் தொகையாக அதுவும் பல மாத இழுத்தடிப்பிற்கு பிறகே தயாரிப்பாளர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இதனால் தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படுகிறது. அதனால் சிண்டிகேட் இல்லாமல் இனிமேல் அந்தந்த தியேட்டர் உரிமையாளர்கள்தான் நேரடியாக தயாரிப்பாளர்களுடன் படத்தை திரையிட ஒப்பந்தம் செய்ய வேண்டும். ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

    English summary
    Cinema strike from March 1 is expected to end soon. Producers council said that if the theater owners fully agree to the 5 main demands of the Producers council, the strike will end next day. Its final negotiations are taking place.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X