twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஃப்ரீ மேக்கிங்... அட்லீக்கு நோட்டீஸ் அனுப்பிய சங்கம்...! எக்ஸ்க்ளுசிவ்

    |

    பொறுத்து பொறுத்து பார்த்த தயாரிப்பாளர் சங்கம் கடந்த வாரம் அட்லீக்கு எதிராக கண்டன தீர்மானமே இயற்றி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதுதான் இன்றைய ஹாட் நியூஸ்.

    தயாரிப்பாளர் சங்க நிர்வாகி ஒருவர் நமக்கு சொன்னதை அப்படியே தருகிறோம்...

    Producers council sent notice to Atlee

    "Remaking' இயக்குநர்கள் மத்தியில், Free making இயக்குநராகத் திகழ்கிறார் இயக்குநர் அட்லி. இவர் எடுத்த எல்லா படங்களுமே வேறு படங்களின் உல்டா மற்றும் ஓவர் பட்ஜெட்.

    திரைத்துறையில் நடைமுறையில் இருப்பது முந்தைய படங்களின் உரிமையாளர்களிடம் உரிமைப்பெற்று ரீமேக் செய்வது. அவ்வாறு பில்லா, மாப்பிள்ளை, தில்லுமுல்லு என பல படங்கள் வெளிவந்துள்ளன.

    ஆனால் வேறு தயாரிப்பாளர்களின் படைப்பில் வெளிவந்த மெளனராகம், சத்திரியன், மூன்று முகம் படங்களை எந்த ஒரு ரீமேக் உரிமமும் (Remake) பெறாமல் அத்திரைப்படங்களின் கருவை வைத்து இயக்குனர் அட்லி அவருக்கு ஏற்றார்போல் இலவசமாக ரீமேக் செய்து வருகிறார்.

    இப்போது திரையில் ஒடிக்கொண்டு இருக்கும் மெர்சல் திரைப்படம் வரை அட்லி எடுத்தவை இலவசமாக ரீமேக்தான்.

    Producers council sent notice to Atlee

    இவ்வாறு செயல்படும் இயக்குநர் அட்லி அவர்கள் மீது மூன்றுமுகம் திரைப்படத்தின் ரீமேக் உரிமம் (Remake) பெற்றுள்ள ஃபைவ் ஸ்டார் பிலிம்ஸ் கதிரேசன் அளித்த புகாரின்படி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் இயக்குநர் அட்லி அவர்கள் மீது கண்டன தீர்மானம் நிறைவேற்றி, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்,'' என்றார்.

    இதற்கான எந்த ஒரு பதிலும் இயக்குநர் அட்லியிடமிருந்து இன்னும் வரவில்லையாம்.

    English summary
    Tamil film producers council has sent a showcause notice to director Atlee for remaking movies without prior permissions from concern producers.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X