ஹீரோ, ஹீரோயின்கூட நெக்ஸ்ட் தான்.. யோகி பாபு தான் பர்ஸ்ட்!
பியார் எனும் புதிய படத்தில் காமெடி நடிகர் யோகி பாபு ஒப்பந்தமாகியுள்ளார்.
Recommended Video

சென்னை: நாயகன், நாயகியே முடிவு செய்யப்படாத 'பியார்' எனும் பேய் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் காமெடி நடிகர் யோகி பாபு.
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடியனாக இருப்பவர் யோகி பாபு. இவர் இல்லாத படங்களே இல்லை என்ற நிலை தான் நீடித்து வருகிறது.
ஹீரோ, ஹீரோயினை முடிவு செய்வதற்கு முன்பு யோகி பாபுவை ஒப்பந்தம் செய்வதில் தான் தயாரிப்பாளர்கள் குறியாக இருக்கின்றனர். அந்த வகையில் மில்கா செல்வகுமார் இயக்கும் பியார் எனும் பேய் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் யோகி பாபு. இந்த படத்தின் ஹீரோ மற்றும் ஹீரோயின் யார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

முன்னணி நடிகர்கள்:
இந்த படத்தில் முன்னணி நடிகர், நடிகைகளை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. சாம்ஸ், ஆர்த்தி, வாசுவிக்ரம், ஷபிபாபு ஆகியோருடன் இன்னும் சில முன்னணி நடிகர் நடிகைகள் நடிக்கிறார்கள்.

சண்டி முனி:
ராகவா லாரன்ஸிடம் உதவியாளராக பணியாற்றியவர் மில்கா செல்வகுமார். இவர் தற்போது, நட்ராஜ் மனிஷா யாதவ் நடிக்க முடிவடையும் நிலையில் உள்ள சண்டி முனி என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இவர் இயக்கும் இரண்டாவது படம் " பியார் ".

பேய்க் காதலர்கள்:
படம் பற்றி இயக்குனர் கூறியதாவது, "வழக்கமாக ஒரு ஹீரோ காதலர்களைத்தான் சேர்த்து வைப்பார்கள். இந்த படத்தில் வித்தியாசமாக ஒரு ஹீரோ இரண்டு பேய்க் காதலர்களை சேர்த்து வைக்கிறார். அதாவது பேயை பேயுடன் சேர்த்து வைப்பது தான் இதன் கதை. பேய்க்காதல் என்றும் சொல்லலாம்.

யோகி பாபு:
ஜூலை மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது. ஊட்டி, குன்னூர், பழனி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. சண்டி முனி படத்தின் படப்பிடிப்பை தயாரிப்பாளரிடம் சொன்னது போல் முடித்துக் கொடுத்ததை கேள்விப்பட்ட தயாரிப்பாளர்கள் என்னை பியார் படத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளனர். இவர்களுக்கும் நான் திட்டமிட்டு சொன்ன படி முடித்துக் கொடுப்பேன்" என்கிறார் மில்கா எஸ்.செல்வகுமார்


Click it and Unblock the Notifications











