"அவங்க விட்டாலும் இவங்க விடமாட்டேங்கிறாங்க..." 'பத்மாவத்' தடைக்கு எதிராக வழக்கு!

By Vignesh Selvaraj

Recommended Video

'பத்மாவத்' தடைக்கு எதிராக வழக்கு!

சென்னை : சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஷாகித் கபூர் ஆகியோர் முதன்மை ரோலில் நடிக்க உருவாகி உள்ள படம் 'பத்மாவத்' என டைட்டில் மாற்றப்பட்ட 'பத்மாவதி'.

சித்தூர் ராணி பத்மாவதி, முகலாய மன்னன் அலாவுதீன் கில்ஜியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் பத்மாவதியை தவறாக சித்தரித்துள்ளதாகக் கூறி ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சென்சார் போர்டு அனுமதித்தும், பல்வேறு மாநிலங்களில் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை நீக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் வழக்கு தொடுத்துள்ளனர்.

பத்மாவத்

பத்மாவத்

பல்வேறு காட்சிகளை நீக்கும் உத்தரவுடன் சென்சார் போர்டு இந்தப் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் அளித்தது. அதோடு படத்தின் பெயரும் மாற்றப்பட்டு 'பத்மாவத்' என்ற பெயரில், வருகிற ஜனவரி 25-ம் தேதி வெளியாக உள்ளது.

நீடிக்கும் தடை

நீடிக்கும் தடை

அதேநேரத்தில், இந்தப் படத்தை வெளியிடுவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு உள்ளது. ராஜஸ்தான், குஜராத், ஹரியானா போன்ற மாநிலங்களில் இப்படத்தை திரையிடப்போவது இல்லை என அந்தந்த மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

தயாரிப்பாளர்கள் தொடர்ந்த வழக்கு

தயாரிப்பாளர்கள் தொடர்ந்த வழக்கு

இந்நிலையில் 'பத்மாவத்' படத்தின் தயாரிப்பாளர்களான அஜித் அந்தாரே மற்றும் சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளனர். சென்சார் போர்டு அனுமதித்தும் தடை விதிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தடையை நீக்க கோரிக்கை

தடையை நீக்க கோரிக்கை

சென்சார் போர்டு அனுமதித்தும், பல்வேறு மாநிலங்களில் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை நீக்க வேண்டும் என்று தங்களது மனுவில் கோரியுள்ளனர். இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொண்டுள்ளது. விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X