ரஜினி நடித்தால் மட்டுமே எந்திரன் 2... வேறு யாருக்கும் அந்த பட்ஜெட் தர முடியாது!!- தயாரிப்பாளர் உறுதி
ஷங்கரின் எந்திரன் 2 படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்தால் மட்டுமே அந்த பெரும் தொகையை பட்ஜெட்டாகத் தர முடியும். வேறு யார் நடித்தாலும் அந்த அளவு செலவு செய்ய முடியாது என்று தயாரிப்பாளர் உறுதியாகக் கூறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினி இப்போது லிங்கா படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படம் அவரது பிறந்த நாளான டிசம்பர் 12-ல் வெளியாகிறது.

ரஜினி சம்மதம்
இந்தப் படம் முடிந்ததுமே அடுத்து ஷங்கர் இயக்கும் எந்திரன் 2 படத்தில் அவர் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஷங்கர் நேரில் போய் ரஜினியிடம் இந்தக் கதையைக் கூறி சம்மதமும் பெற்றுவிட்டார்.

மருத்துவர்கள் ஆலோசனை
ஆனாலும் தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் ரஜினி ஆலோசனை கேட்டபோது, கடினமான காட்சிகளில் நடிக்கக் கூடாது என அறிவுறுத்தினர். இதனால் ரஜினி நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ரூ 200 கோடி
இந்தப் படத்தை ரிலையன்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகக் கூறப்படுகிறது. படத்துக்கான பட்ஜெட்டாக ரூ 200 கோடி வரை தோராயமாக கணக்குக் கொடுத்திருந்தார் ஷங்கர்.

தயாரிப்பாளர் தயக்கம்
படத்தில் ரஜினி நடிக்கிறார் என்பதற்காகவே இவ்வளவு பெரிய தொகையை செலவழிக்க ரிலையன்ஸ் நிறுவனம் முன்வந்தது. ஆனால் தற்போது ரஜினி தயங்குவதாக செய்தி வெளியானதால், இந்தப் படத்துக்கு ரஜினி ஹீரோ என்றால் மட்டுமே இவ்வளவு பட்ஜெட் தரமுடியும் என்றும், வேறு யார் நடிப்பதாக இருந்தாலும் ரூ 60 கோடிக்குமேல் செலவழிக்க முடியாது என்றும் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்களாம்.

மாற்றுத் திட்டம்
எனவே ரஜினிக்கு அதிக ரிஸ்க் தராத வகையில் படத்தின் காட்சிகளை எடுக்க மாற்றுத் திட்டம் தயாரித்துள்ளாராம் இயக்குநர் ஷங்கர்.


Click it and Unblock the Notifications











