எப்பவும் இப்படித்தான்.. அரசியல் பேசி எங்களை மாட்டிவிடுகிறார்.. விஜய் குறித்து புலம்பிய தயாரிப்பாளர்
Recommended Video
நடிகர் விஜய்யின் அரசியல் பேச்சுக்கள் மற்றும் நிலைப்பாடுகள் காரணமாக முன்னணி தயாரிப்பாளர் ஒருவர் அவர் மீது கோபத்தில் இருப்பதாக தகவல்கள் வருகிறது.
சென்னை: நடிகர் விஜய்யின் அரசியல் பேச்சுக்கள் மற்றும் நிலைப்பாடுகள் காரணமாக முன்னணி தயாரிப்பாளர் ஒருவர் அவர் மீது கோபத்தில் இருப்பதாக தகவல்கள் வருகிறது.
நடிகர் விஜய் நடிக்கும் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் நடந்தது. இதில் நடிகர் விஜய் அரசியல் பேசியது பெரிய வைரல் ஆனது.
இந்த நிலையில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு அனுமதி வழங்கியதற்காக சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பிகில் விழாவிற்கு ஏன் அனுமதி வழங்கப்பட்டது என்று கேள்வி கேட்கப்பட்டு உள்ளது.

சிக்கல்
இதேபோல் இதற்கு முன் மெர்சல், தெறி, சர்க்கார் பட விழாக்களிலும் விஜய் அரசியல் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அந்த படங்களுக்கு பெரிய சிக்கல் வந்தது. முக்கியமாக மெர்சல் மற்றும் சர்க்கார் படங்களுக்கு பெரிய அளவில் பிரச்சனை வந்தது.

எப்படி
இதனால் சில முக்கிய தயாரிப்பாளர்கள் அவர் மீது கோபத்தில் இருப்பதாக செய்திகள் வந்துள்ளது. ஆம், விஜய் அவர் விருப்பப்படி அரசியல் பேசிவிட்டு சென்றுவிடுகிறார். ஆனால் சில கட்சியை சேர்ந்தவர்கள் எங்கள் மீது அழுத்தம் கொடுக்கிறார்கள். எங்களுக்கு அரசியல் கட்சிகளிடம் இருந்து அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

மிக மோசம்
இதனால் எங்கள் படத்தின் வசூலும் பாதிக்கப்படுகிறது, என்று சில தயாரிப்பாளர் கூறி உள்ளனர். மேலும் விஜய் அடுத்த படத்தை தனது குடும்பத்தை சேர்ந்த ஒருவரை வைத்து தயாரிக்கிறார். அந்த படத்தின் விழாவில் எல்லாம் விஜய் கண்டிப்பாக அரசியல் பேச மாட்டார் என்றும் அவர் கூறி இருக்கிறார்.

அதிக கோபம்
விஜய் இப்படி தொடர்ந்து அரசியல் பேசுவதால், படம் வெளியாவதில் சிக்கல் ஏற்படுகிறது என்றும் அவர் கூறி உள்ளனர். விஜய் கடைசியாக பிகில் மேடையில் பேசிய போதும் சில அரசியல் கருத்துக்களை சொன்னார். சர்ச்சையை கருத்தில் கொண்டு இந்த காட்சிகள் ஒளிரப்பின் போது கட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











