விக்ரம், சீனு ராமசாமி பட வாய்ப்புகள் போச்சே... மலையாள ஹீரோ திடீர் சரண்டர் லெட்டர்... நீங்குமா தடை?

By

சென்னை: தமிழில் விக்ரம், சீனு ராமசாமி பட வாய்ப்புகளும் பறிபோனதால், மலையாள இளம் ஹீரோ, தயாரிப்பாளருக்கு மீண்டும் மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார்.

மலையாள சினிமாவின் இளம் நடிகர்களில் ஒருவர் ஷேன் நிகாம். இஷ்க், கும்பளங்கி நைட்ஸ் உள்பட சில படங்களில் நடித்துள்ளார்.

வெயில் என்ற படத்தில் நடிக்க ரூ.40 லட்சம் சம்பளத்தில் ஒப்பந்தம் ஆகியிருந்தார். ஷூட்டிங் தொடங்கி நடந்துகொண்டிருந்தபோது, கூடுதலாக சம்பளம் வேண்டும் என்று கேட்டதாக தெரிகிறது.

டப்பிங் பேச மறுப்பு

டப்பிங் பேச மறுப்பு

இதற்கு அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஜோபி ஜார்ஜ் மறுத்துள்ளார். இதையடுத்து ஷேன் நிகாம் அந்த படத்துக்கு டப்பிங் பேச மறுத்துவிட்டார். அதோடு படத்துக்கான தனது கெட்டப்பை மாற்றி, புதிய புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜோபி ஜார்ஜ் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தார்.

தடை விதிப்பு

தடை விதிப்பு

ஷேன் நிகாமால், ரூ. 3 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், படம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஜோபி ஜார்ஜ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தயாரிப்பாளர்கள் குறித்து தரகுறைவாகப் பேசினார் ஷேன் நிகாம். இதனால் தயாரிப்பாளர் சங்கம், படங்களில் நடிக்க ஷேன் நிகாமுக்குத் தடை விதித்தது.

தமிழ் படங்களில்

தமிழ் படங்களில்

இதுபற்றி நடிகர் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது படத்தின் நஷ்டத்தை ஷேன் நிகாம் ஈடுகட்ட வேண்டும் என்று தயாரிப்பாளர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. தடை தொடர்ந்ததால், ஷேன் நிகாம் படங்களில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. தமிழில் நடிகர் விக்ரமின் கோப்ரா, சீனுராமசாமி இயக்கும் படங்களில் நடிக்க ஷேன் நிகாம் ஒப்பந்தம் ஆகி இருந்தார்.

பாக்கித் தொகை

பாக்கித் தொகை

இந்தப் படங்களில் இருந்து அவர் நீக்கப்பட்டதால், மன வருத்தம் அடைந்தார். இந்நிலையில் ஷேன் நிகாம் தயாரிப்பாளர் ஜோபி ஜார்ஜுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்பதாகவும், வெயில் படத்துக்காக பேசப்பட்ட 40 லட்சத்தில் பாக்கித்தொகையான 16 லட்சம் தனக்கு வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார். இதற்கு, தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று ஜோபி ஜார்ஜ் பதில் கடிதம் எழுதியுள்ளார்.

இதையடுத்து பிரச்னையை நீட்டிக்காமல், அவருக்கான தடையை தயாரிப்பாளர் சங்கம் நீக்கும் என்று தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X