twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திருட்டு வீடியோவை ஒழிங்க.. அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் கோரிய தயாரிப்பாளர்கள்!

    பைரசியை ஒழிக்க வலியுறுத்தி அமைச்சர் கடம்பூர் ராஜுவுடம் தயாரிப்பாளர்கள் மனு அளித்தனர்.

    |

    சென்னை: தமிழ்த்திரைப்பட பைரசியை ஒழிக்க நடவடிக்கை எடுக்க கோரி "ஒரு குப்பைக் கதை" மற்றும் மனுசனா நீ" தயாரிப்பாளர்கள் அமைச்சர் கடம்பூர் ராஜுவிடன் மனு அளித்துள்ளனர்.

    கிரைப்படங்கள் ரிலீசான அன்றே திருட்டுத்தனமாக அதை கேமிராவில் பதிவு செய்து, சிடியாகவும், இன்டெர்னெட்டில் விட்டும் பணம் சம்பாதிக்கும் கும்பல் நாளுக்கு நாள் பெருகிவருகிறது.

    Producers meet Minister Kadammbur Raju!

    இதுபோன்ற கயவர்களின் செயலினால் தமிழ்சினிமா அழிவின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருப்பதை மறுக்க முடியாது. சினிமாவை விரும்பி பார்க்கும் ரசிகர்களும், டிக்கட் விலை போன்ற காரணங்களால் அதற்கு ஆதரவு அளிக்கும் விதமாக இண்டர்னெட்டில் பதிவிறக்கம் செய்து படத்தை பார்க்கின்றனர்.

    கிருஷ்ணகிரி முருகன் தியேட்டரில் 'மனுசனா நீ' படம் திருடப்பட்டதும், மயிலாடுதுறை கோமதி தியேட்டர், கரூர் எல்லோரா தியேட்டர் ஆகிய இரண்டு தியேட்டர்களில் 'ஒரு குப்பைக் கதை' திருடப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இரு தியேட்டர்கள் மீதும் கிரிமினல் வழக்குகள் போடப்பட்டுள்ளன. விரைவில் கரூர் எல்லோரா தியேட்டர் மீது வழக்கு பாய உள்ளது.

    இந்த நிலை தொடர்ந்தால், சினிமா தொழிலே முற்றிலும் அழிந்துவிடும் எனக் கூறி, கடந்த பிப்ரவரி மாதம் ரிலீசான "மனுசனா நீ" திரைப்படத்தின் தயாரிப்பாளர் கசாலியும், கடந்த மே மாதம் ரிலீசான "ஒரு குப்பைக் கதை" திரைப்படத்தின் தயாரிப்பாளர் முகம்மது அஸ்லமும் விளம்பரம் மற்று செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவை சந்தித்து தக்க நடவடிகிகை எடுக்கும்படி கோரிக்கை மனுவை அளித்தனர்.

    மனுக்களைப் பெற்று விபரங்களைக் கேட்டறிந்த அமைச்சர் தக்க நடவடிக்கை எடுத்து நஷ்டஈடு பெற்றுத் தரவும், உறுதியான நடவடிக்கை எடுத்து பைரஸியை ஒழிக்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்தார்.

    English summary
    Producers of Oru Kuppai kadhai and Manusana nee met Minister Kadambur raju and requested him to take immediate action against cinema piracy. Minister accepted their request and assured.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X