பார்த்திபன் கொடுத்த புத்தாண்டு கேக்.... சர்ப்ரைஸ் ஆன இளையராஜா!
Recommended Video

சென்னை : நடிகர் பார்த்திபன் தலைமையில் தமிழ் திரைப்பட சங்க நிர்வாகிகள் இசையமைப்பாளர் இளையராஜாவை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைப்பணியை பாராட்டி விழா எடுக்கப்படுகிறது. இளையராஜாவை கவுரவிக்கும் அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சி மூலம் திரட்டப்படும் நிதியை, தயாரிப்பாளர் சங்கத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

வரும் பிப்ரவரி மாதம் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இளையராஜா 75 விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். இந்த விழாவில் பங்கேற்பதற்காக முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் துணைத் தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட நடிகர் பார்த்திபன் தலைமையிலான சங்க நிர்வாகிகள் இளையராஜாவை இன்று சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர். அப்போது 19 வருடம், 75 வயது என எழுதப்பட்ட கேக் ஒன்றை எடுத்து சென்று சென்றிருந்தனர்.

அதனை இளையராஜா கையால் வெட்டச் செய்து, புத்தாண்டை கொண்டாடினர். சமீபகாலமாக நடிகர் பார்த்திபன் எங்கு சென்றாலும் யாருக்காவது கேக் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த கேக்கில் தனது கற்பனை குதிரையை ஓடவிட்டு அசத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











