கிரிமினல் குற்றங்கள் செய்த விஷால் பதவி விலக வேண்டும்: தயாரிப்பாளர் சங்கத்துக்கு பூட்டு

By Siva

Recommended Video

தயாரிப்பாளர் சங்க கட்டிடத்திற்கு பூட்டு போட்ட தயாரிப்பாளர்கள்-வீடியோ

சென்னை: விஷால் மீது அதிருப்தி அடைந்த தயாரிப்பாளர்கள் சிலர் தயாரிப்பாளர் சங்க கட்டிடத்திற்கு பூட்டு போட்டுள்ளனர்.

நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் என்று 2 பொறுப்புகளில் உள்ளார் விஷால். தயாரிப்பாளர் சங்க தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றவில்லை என்று குற்றச்சாட்டு உள்ளது.

Producers protest against Vishal

இந்நிலையில் அவர் யாரிடமும் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்படுவதாக மேலும் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து சென்னை தி. நகரில் உள்ள தயாரிப்பாளர்கள் சங்க கட்டிடத்திற்கு வந்த தயாரிப்பாளர்கள் சிலர் விஷாலை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தயாரிப்பாளர் சங்க கட்டிடத்திற்கு பூட்டு போட்டனர். விஷால் தமிழ் ராக்கர்ஸை அடக்க மாட்டார், ஏனென்றால் அவரும் அதில் பார்ட்னர் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். மேலும் கடந்த நிர்வாகத்தின்போது சேமிக்கப்பட்ட ரூ. 7 கோடி வைப்பு நிதியை காணவில்லை, அதை விஷால் என்ன செய்தார் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

Producers protest against Vishal

இந்நிலையில் அண்ணாசாலையில் உள்ள தயாரிப்பாளர் சங்க கட்டிடத்திற்கும் பூட்டு போட்டு போராட்டம் நடத்துகிறார்கள். ஏ.எல். அழகப்பன், ஜே.கே. ரித்தீஷ், சுரேஷ் காமாட்சி, ராஜன் உள்ளிட்ட 150 தயாரிப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பன் கூறியதாவது,

விஷால் தான் அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. பிரச்சனைகள் குறித்து விவாதிக்க பொதுக்குழுவை கூட்ட வேண்டும். நடிகர் சங்கத்தில் பொறுப்பு வகிக்கும் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவர் ஆனது தவறு. தமிழ் ராக்கர்ஸை அடக்க தவறிவிட்டார். அவர் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு வந்தே 7 மாதங்கள் ஆகிறது. விஷால் பல கிரிமினல் குற்றங்கள் செய்துள்ளார். அவர் பதவி விலக வேண்டும்.

Producers protest against Vishal

வாரத்திற்கு 4 படங்கள் ரிலீஸ் செய்யலாம் என்ற நிலையில் தற்போது 6, 7 படங்கள் வெளியாகின்றன. இதனால் தியேட்டர்கள் கிடைப்பதில் பிரச்சனையாக உள்ளது என்றார்.

தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளான பிரகாஷ் ராஜ், கவுதம் மேனன் எதையுமே கண்டுகொள்வது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விஷால் விவகாரம் தொடர்பாக முதல்வரிடம் புகார் அளிக்கப் போவதாக ஜே.கே. ரித்தீஷ் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X