twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரூ.600 கோடி முடக்கம்.. ஷூட்டிங் தொடர அனுமதிக்குமாறு தயாரிப்பாளர்கள் கோரிக்கை.. அமைச்சரிடம் மனு!

    By
    |

    சென்னை: ரூ.600 கோடி முதலீடு முடங்கியுள்ளதால் ஷூட்டிங் தொடங்க அனுமதிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

    தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களில் சிலர், படப்பிடிப்பு தொடங்க அனுமதிக் கோரி அமைச்சர் கடம்பூர் ராஜுவை இன்று சந்தித்தனர்.

    அப்போது கோரிக்கை மனுவை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

    லாக்டவுன் முடிந்தவுடன் இப்படித்தான் வேலைக்கு செல்வோம்..வீடியோ வெளியிட்ட பிக் பாஸ் பிரபலம்லாக்டவுன் முடிந்தவுடன் இப்படித்தான் வேலைக்கு செல்வோம்..வீடியோ வெளியிட்ட பிக் பாஸ் பிரபலம்

    போஸ்ட்-புரொடக்சன்

    போஸ்ட்-புரொடக்சன்

    தமிழகத்தில் ஊரடங்கு சட்டம் அமலுக்கு வரும் முன்பே, தமிழ் திரைப்படத் துறை ஷூட்டிங் மற்றும் இதர போஸ்ட்-புரொடக்சன் வேலைகளை 16.3.2020 முதல் அமல்படுத்தி தற்போது 50 நாட்களுக்கு மேலாக திரைப்பட துறை சம்பந்தப்பட்ட எந்த ஷூட்டிங் வேலைகளும் நடக்கவில்லை. போஸ்ட்-புரொடக்ஷன் பணிகள் மட்டும் 11 ஆம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது.

    ரூ 600 கோடி முதலீடு

    ரூ 600 கோடி முதலீடு

    படப்பிடிப்பு நடுத்தப்பட்டு, சில நாட்கள் மட்டும் ஷூட்டிங் செய்து முடிக்க வேண்டிய படங்கள் 50-க்கும் மேல் உள்ளன. இதனால் ஏறக்குறைய 600 கோடி ரூபாய் முதலீடு முடங்கியுள்ளது. 50-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறியுள்ளது. தற்போது போஸ்ட்-புரொடக்ஷன் பணிகளை, சுகாதாரமான முறையில் மத்திய மாநில அரசுகள் விதிக்கும் கட்டுப்பாடுகளையும் பின்பற்றி, கவனமாக செய்து வருகிறோம்.

    நிபந்தனையுடன்

    நிபந்தனையுடன்

    அதே போல், ஷூட்டிங் பணிகளையும் கவனத்துடன் செய்ய உறுதி அளிக்கிறோம். 11 தொழிற்துறைகளுக்கு எவ்வாறு தற்போது நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கியிருப்பதை போன்று, 50 சதவீதம் திரைத்துறை தொழிலாளர்களுடன் (அதிகபட்சம் 100 பேர் மட்டும் பங்கு கொள்ளும்) நாங்கள் ஷூட்டிங் பணிகளையும் தொடர அனுமதி அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    50 படங்களுக்கு

    50 படங்களுக்கு

    ஏற்கனவே திரைப்படங்களை தொடங்கி முழுமை அடையாமல் இருக்கும் 50 படங்களுக்கு தற்போது இந்த ஷூட்டிங் அனுமதி கோருகிறோம். இந்த அனுமதி மூலம், திரைத்துறை சம்பந்தப்பட்ட 10,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும். கனிவுடன் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    Recommended Video

    Amazon Prime ல் வெளியாகும் 7 படங்கள் | PonMagal Vandhal, Penguin
    பி.எல்.தேனப்பன்

    பி.எல்.தேனப்பன்

    இவ்வாறு தயாரிப்பாளர்களின் கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்கள் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, ஶ்ரீராஜலட்சுமி பிலிம்ஸ் பி.எல்.தேனப்பன், மனோபாலா, ஆர்.கே.சுரேஷ், சுரேஷ் காமாட்சி, பாப்டா தனஞ்செயன், விடியல் ராஜூ உள்ளிட்டோர் அமைச்சரை சந்தித்து இந்த மனுவை கொடுத்தனர்.

    English summary
    Film Producers Requested Minister Kadambur Raju to resume the film shooting.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X