எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வேணும் - தயாரிப்பாளர் சங்கத்தினர்

தயாரிப்பாளர் சங்கத்துக்கும் தொழிலாளர் அமைப்பான பெப்சிக்கும் பெரும் மோதல் ஏற்பட்டுள்ளது.
சம்பளப் பிரச்சினை என்பதை இரண்டாம் பட்சமாகக் கருதும் தயாரிப்பாளர்கள், இப்போதைக்கு பெப்சியை முடக்க வேண்டும், அல்லது பெப்சிக்கு மாற்றாக வேறு அமைப்பை தொடங்க வேண்டும் என்பதில்தான் மும்முரம் காட்டுகிறார்கள். பெப்சிக்கு ஆதரவானவர்களுக்கு எதிராக நடிவடிக்கை எடுப்பதிலும் தீவிரமாக உள்ளனர்.
தயாரிப்பாளர்களை வழிக்குக் கொண்டுவர, பெப்சி காலவரையற்ற ஸ்ட்ரைக்கை அறிவிக்க, இதுதான் சமயமென்று, பெப்சி அறிவித்த அதே தேதியில் படப்பிடிப்பு நடத்தப் போவதாக தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
நாளை படப்பிடிப்புப் பணிகளை ஆரம்பிக்கும்போது பெப்சி அமைப்பைச் சேர்ந்த தொழிலாளர்கள் இடையூறு ஏற்படுத்தும் வாய்ப்பிருக்கிறது. எனவே எங்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள் என இப்போது முன்னெச்சரிக்கையாக போலீசில் மனு கொடுத்து வைத்திருக்கிறது தயாரிப்பாளர் சங்கம்.
நாளை திட்டமிட்டபடி தொழிலாளர்களின் ஸ்ட்ரைக் நடக்குமா? தயாரிப்பாளர்களின் படப்பிடிப்பு நடக்குமா?
பார்க்கலாம்!


Click it and Unblock the Notifications











