மறைந்த இயக்குநர் எஸ்.பி. ஜனநாதனின் கடைசி படம்.. விஜய்சேதுபதியின் லாபம் ரிலீஸ் எப்போ தெரியுமா?

சென்னை: லாபம் படத்தின் இறுதிகட்ட பணிகளில் ஈடுபட்டிருந்த நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த மார்ச் 14ம் தேதி இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் காலமானார்.

விஜய்சேதுபதி, ஸ்ருதி ஹாசன் நடிப்பில் உருவாகி இருந்த லாபம் திரைப்படத்தின் ரிலீஸ், இதன் காரணமாக நெடுநாட்களுக்கு தள்ளிப் போகுமா? என ரசிகர்கள் கவலைப்பட்ட நிலையில், தற்போது படம் எப்போ ரிலீஸ் ஆகும் என்கிற அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும், இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துக் கொடுத்துள்ளார் என்றும் தயாரிப்பு நிறுவனம் தெளிவு படுத்தி உள்ளது.

கடைசி படம்

கடைசி படம்

இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு எனும் பொதுவுடைமை என இதுவரை எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் 4 கருத்தாக்கம் கொண்ட படங்கள் வெளியாகி உள்ளன. விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடிப்பில் லாபம் படத்தை இயக்கி வந்த நிலையில், உடல் நலக் குறைவு காரணமாக இயக்குநர் ஜனநாதன் காலமான நிலையில், லாபம் படம் அவரது கடைசி படமாக மாறியது.

கம்யூனிச சிந்தனை

கம்யூனிச சிந்தனை

கம்யூனிச சிந்தனை கொண்ட எஸ்.பி. ஜனநாதன் தனது படங்களில் சர்வதேச அரசியல் குறித்தும், பொருளாதார அரசியல் குறித்தும் ஏகப்பட்ட கம்யூனிச சிந்தனைகளை விதைத்துள்ளார். இந்தியா விவசாய நாடு என்றும், பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் நம் நில வளத்தையும், நீர் வளத்தையும் அழிக்கின்றன என்கிற கருத்தை மையமாக வைத்தே லாபம் படத்தை இயக்கி உள்ளார்.

அடுத்த மாதம்

அடுத்த மாதம்

திடீரென உடல் நலக் குறைவு காரணமாக இயக்குநர் ஜனநாதன் இயற்கை எய்திய நிலையில், லாபம் திரைப்படத்தின் ரிலீஸ் தாமதமாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அனைத்து பணிகளையும் அவர் முடித்துக் கொடுத்து விட்டார் என்றும் வரும் ஏப்ரல் மாதம் லாபம் படம் திரைக்கு வரும் என தற்போது தயாரிப்பு நிறுவனமான 7சிஎஸ் என்டர்டெயின் அறிவித்துள்ளது.

லாபம்

லாபம்

இமான் இசையில் ஸ்ருதிஹாசன் குரலில் சமீபத்தில் வெளியான யாழா யாழா பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. விஜய்சேதுபதி வித்தியாசமான கெட்டப்பில் நடித்திருக்கும் லாபம் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விஜய்சேதுபதி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஹாட்ரிக் அடித்த விஜய்சேதுபதி

ஹாட்ரிக் அடித்த விஜய்சேதுபதி

ஜனவரி மாதம் தளபதி விஜய்யுடன் விஜய்சேதுபதி இணைந்து நடித்த மாஸ்டர் திரைப்படம் வெளியானது. பிப்ரவரி மாதம் ஆந்தாலஜி திரைப்படமான குட்டி ஸ்டோரி வெளியானது. மார்ச் மாதம் மட்டும் தான் மிஸ்சிங், அடுத்த்தாக ஏப்ரல் மாதம் லாபம் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த ஆண்டு விஜய்சேதுபதி டபுள் ஹாட்ரிக் அடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X