தொடரும் சிம்புவின் 9 சென்டிமென்ட்....வெந்து தணிந்தது காடு டீசர் ரிலீஸ் தேதி வெளியீடு

சென்னை : வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு படத்தை தொடர்ந்து கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் வெந்து தணிந்தது காடு. இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கடந்த சில மாதங்களாக இசையமைத்து வருகிறார்.

வெந்து தணிந்தது காடு படத்தின் இறுதிக்கட்ட ஷுட்டிங் மும்பை மற்றும் சென்னையில் துவங்கப்பட்டுள்ளது. சுமார் 25 நாட்கள் இந்த ஷுட்டிங் நடத்தப்பட உள்ளது. சமீபத்தில் மும்பையில் வெந்து தணிந்தது படத்தின் இறுதிக்கட்ட ஷுட்டிங் துவங்கியது.

டிரெண்டிங்கான ஹாஷ்டேக்

டிரெண்டிங்கான ஹாஷ்டேக்

கையில் துப்பாக்கியுடன் போஸ் கொடுத்த சிம்புவின் ஸ்டில்கள் இன்ஸ்டாகிராமில் செம வைரலாகின. இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தின் டீசர் இந்த வாரம் ரிலீசாகும் என ஏற்கனவே கூறப்பட்டது. இதனால் இது பற்றிய அறிவிப்பு எப்போது வரும் என ரசிகர்கள் காத்திருந்தனர். வெந்து தணிந்தது காடு ஹாஷ்டேக்கை உருவாக்கி டிரெண்டிங் ஆக்கி உள்ளனர்.

டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக வெந்து தணிந்தது காடு படத்தின் டீசர் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்தை தயாரிக்கும் வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தங்களின் ட்விட்டர் பக்கத்தில், வெந்து தணிந்தது காடு படத்தின் டீசர் டிசம்பர் 10 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.

தொடரும் சிம்புவின் 9 சென்டிமென்ட்

தொடரும் சிம்புவின் 9 சென்டிமென்ட்

சிம்புவின் வழக்கமான 9 சென்டிமென்ட் இந்த படத்திலும் பின்பற்றப்பட உள்ளது. அதாவது வெந்து தணிந்தது காடு படத்தின் டீசர் டிசம்பர் 10 ம் தேதி சரியாக பகல் 1.26 (1+2+6=9) மணிக்கு வெளியிடப்பட உள்ளதாம். இதற்கு முன் சிம்பு நடித்து வெளிவந்துள்ள மாநாடு படமும் 9 சென்டிமென்ட் அடிப்படையிலேயே நவம்பர் 25 ம் தேதி (2+5+1+1=9) ரிலீஸ் செய்யப்பட்டது.

சிம்பு கேரக்டர் பெயர்

சிம்பு கேரக்டர் பெயர்

வெந்து தணிந்தது காடு படத்தின் டீசர் ரிலீசை முன்னிட்டு , Glimpse of Muthu's journey என்ற வாசகத்துடன் புதிய போஸ்டர் ஒன்றையும் வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் சிம்புவின் கேரக்டர் பெயர் முத்து என்பது தெரிய வந்துள்ளது. வெந்து தணிந்தது காடு படத்தின் ஷுட்டிங் ஏற்கனவே 80 சதவீதம் நிறைவடைந்து விட்டது. ஜனவரி மாத துவக்கத்தில் படத்தின் ஒட்டுமொத்த ஷுட்டிங்கையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

எப்போ ரிலீஸ்

எப்போ ரிலீஸ்

இந்த படத்தில் கன்னட நடிகை காயடு லோஹர் ஹீரோயினாகவும், மலையாள நடிகர் நீரஜ் மாதவ் வில்லனாகவும் நடித்துள்ளனர். ராதிகா சரத்குமார் சிம்புவின் அம்மாவாக மிக முக்கிய ரோலில் நடித்துள்ளாராம். 2022 ம் ஆண்டின் துவக்கத்தில் அல்லது மத்தியில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X