Project K: Project K-ல் சூப்பர் ஸ்டார்... நோ சொன்ன பிரபாஸ்... சைலண்டாக என்ட்ரி கொடுத்த உலகநாயகன்!
ஹைதராபாத்: பிரபாஸின் ப்ராஜெக்ட் கே படத்தில் உலக நாயகன் கமல்ஹாசனும் கமிட்டாகியுள்ளார்.
நாக் அஸ்வின் இயக்கும் இந்தப் படத்தில் பிரபாஸ், கமலுடன் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் ஆகியோரும் நடித்து வருகின்றனர்.
ப்ராஜெக்ட் கே படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக கமல் நடிப்பதாக சொல்லப்படுகிறது.
முன்னதாக இந்த கேரக்டரில் ரஜினி நடிக்கவிருந்ததாகவும், ஆனால் பிரபாஸ் தான் நோ சொல்லிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ப்ராஜெக்ட் கே படத்தில் ரஜினிக்கு பதில் கமல்: பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் ப்ராஜெக்ட் கே திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. நாக் அஸ்வின் இயக்கும் இப்படம் அடுத்தாண்டு பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகிறது. பிரபாஸுடன் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் ஆகியோரும் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகின்றனர். அவர்களுடன் தற்போது உலகநாயகன் கமல்ஹாசனும் இணைந்துள்ளார்.
இதில் பிரபாஸுக்கு வில்லனாக கமல் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. அதேபோல், கமல்ஹாசனின் கேரக்டர் க்ளைமேக்ஸில் மட்டுமே வரும் எனவும் கூறப்படுகிறது. ப்ராஜெக்ட் கே படத்தின் முதல் பாகத்தில் கமலின் போர்ஷன் கொஞ்சமே இருக்கும் என்பதால், இரண்டாம் பாகத்தில் அவருக்கு இன்னும் மெர்சலான காட்சிகளை வைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம். ஆனாலும் இதுகுறித்து இன்னும் அபிஸியலாக அப்டேட் எதுவும் வெளியாகவில்லை.
அதேநேரம் ப்ராஜெக்ட் கே படத்தில் நடிக்க கமலுக்கு மொத்தமே 20 கோடி ரூபாய் மட்டுமே சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம். ஆனால், பிரபாஷுக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இப்படத்தில் கமல் நடிக்க வேண்டிய கேரக்டரில் சூப்பர் ஸ்டார் ரஜினிதான் நடிப்பதாக இருந்துள்ளது. இயக்குநர் நாக் அஸ்வின் ரஜினியை தான் வில்லனாக நடிக்க வைக்க வேண்டும் என தேர்வு செய்துள்ளார்.
ஆனால், ப்ராஜெக்ட் கே ஹீரோ பிரபாஸ், இதற்கு நோ சொல்லிவிட்டாராம். சூப்பர் ரஜினிகாந்த் பக்கா ஹீரோ மெட்டீரியல் நடிகர். அதனால் அவரை வில்லனாக நடிக்க வைத்தால் மக்கள் ஏற்றுக்கொள்வது கஷ்டம் தான் என்றுள்ளார். அதன் பின்னரே பிரபாஸும் இயக்குநர் நாக் அஸ்வினும் சேர்ந்து உலகநாயகன் கமல்ஹாசனை தேர்ந்தெடுத்துள்ளனர். இதுகுறித்து கமலிடமும் பேச, அவரும் உடனடியாக ஓக்கே சொல்லிவிட்டாராம்.
2020ம் ஆண்டு தொடங்கப்பட்ட ப்ராஜெக்ட் கே, வைஜெயந்தி மூவிஸின் 50வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டது. அப்போது கோவிட் பரவல் இருந்ததால், படப்பிடிப்பு தாமதமானது. சுமார் 500 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ப்ராஜெக்ட் கே படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது. மிரட்டலான ஆக்ஷன் ஜானர் படமாக உருவாகும் ப்ராஜெக்ட் கே சினிமா ரசிகர்களுக்கு தரமான ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











