2023 Debutant directors: 2023ல் அதிக கவனம் பெற்ற அறிமுக இயக்குநர்கள்.. அடுத்தப்படம் எப்போ!

சென்னை: இந்த ஆண்டு 2023 தமிழ் சினிமாவிற்கு சிறப்பாக அமைந்தது. அதிகமான படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தளித்தது.

முன்னணி ஹீரோக்கள், புதுமுகங்கள் என அடுத்தடுத்த படங்கள் வெளியாகி இந்த ஆண்டை சிறப்பித்துள்ளன.

Promising debutant directors in 2023 year and fans waiting for their next movie

இந்த ஆண்டில் தமிழ் சினிமாவிற்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் புதுமுக இயக்குநர்களின் படங்கள் சிறப்பான வெற்றியை கொடுத்துள்ளன.

சிறப்பான 2023ம் ஆண்டு: 2023ம் ஆண்டு இப்பொழுதுதான் துவங்கியதுபோல உள்ளது. ஆனால் தற்போது ஆண்டின் இறுதியை நெருங்கியுள்ளோம். இன்னும் ஒரு மாதகாலத்தில் 2024ம் ஆண்டை தொட்டு விடுவோம். இந்த ஆண்டின் துவக்கத்தில் பல இலக்குகளை திட்டமிட்டு அதில் வெற்றி பெற்றவர்களும் அடடே செய்ய முடியாமல் போய்விட்டதே என்று அடுத்த ஆண்டிற்கு தள்ளிப் போட்டவர்களையும் நாம் பார்க்க முடிகிறது. ஆனால் தமிழ் சினிமாவை பொருத்தவரையில் இந்த ஆண்டு மிகச்சிறப்பாகவே அமைந்தது.

சாதனைகளை படைத்த திரைத்துறை: கொரோனா உள்ளிட்ட காரணங்களால் தமிழ் சினிமா மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் சினிமாத்துறை மிகப்பெரிய பாதிப்பிற்கு கடந்த ஆண்டுகளில் உள்ளானது. திரையரங்குகள் மூடப்பட்டன. ஓடிடியில் திரைப்படங்கள் வெளியாவது அதிகரித்தது. சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்கள்கூட ஓடிடியில் வெளியாகி ரசிகர்களுக்கு திரையரங்க அனுபவத்தை கொடுக்க முடியாமல் திண்டாடியது. இந்நிலையில் அனைத்து பிரச்சினைகளில் இருந்தும் மீண்டு இந்த ஆண்டில் திரைத்துறை சிறப்பான பல சாதனைகளை செய்துள்ளது

முன்னணி நடிகர்களின் படங்கள்: உதாரணமாக பல படங்களை கூறலாம். கடந்த சில ஆண்டுகளாக சிறப்பான படங்களை கொடுக்காத ரஜினிகாந்த், விஜய் போன்றவர்களுக்கும் இந்த ஆண்டு சிறப்பாக அமைந்துள்ளது. ரஜினியின் ஜெயிலர், விஜய்யின் லியோ போன்ற படங்கள் வளர்ந்துவரும் இயக்குநர்களின் கதைவண்ணத்தில் ரசிகர்களை சிறப்பாக என்டர்டெயின் செய்துள்ளன. அந்த வகையில் கடந்த ஆண்டில் வெளியான கமல்ஹாசனின் விக்ரம் படம் இன்டஸ்ட்ரியல் ஹிட்டடித்துள்ளது.

நம்பிக்கையை கொடுத்த அறிமுக இயக்குநர்கள்: இந்த ஆண்டில் புதுமுக இயக்குநர்களின் வரவு மற்றும் அவர்களின் முதல் படங்களின் வெற்றி மிகப்பெரிய நம்பிக்கையை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளன. அந்த வகையில் கவின் நடிப்பில் வெளியான டாடா படத்தை இயக்கியுள்ள கணேஷ் பாபு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இடையில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளார். அந்த வரிசையில் சசிக்குமாரின் அயோத்தி படத்தை இயக்கிய மந்திர மூர்த்திக்கும் முதல் படம் சிறப்பான விமர்சனங்களையும் வெற்றியையும் கொடுத்துள்ளது.

அடுத்தடுத்த சிறப்பான படங்கள்: தொடர்ந்து குட்நைட் என்ற படத்தின்மூலம் எளிமையான கதையை சிறப்பாக கொடுக்கலாம் என்று நிரூபித்துள்ளார் விநாயக் சந்திரசேகரன். இந்தப் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் அவர் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்ததாக போர் தொழில் என்ற படத்தின்மூலம் சைக்காலஜிக்கல் த்ரில்லர் படத்தை கொடுத்து மிகப்பெரிய அதிர்வுகளை கோலிவுட்டில் ஏற்படுத்தியுள்ள விக்னேஷ் ராஜா இந்த வரிசையில் இணைந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X