இதை.. இதைத்தான் எதிர்பார்த்தோம்.. பாலாவை புடிச்சு ஜெயில்ல போட்ட பிக் பாஸ்.. உருப்படியான புரமோ!

சென்னை: ஹவுஸ்மேட்களை இந்த வாரம் யார் போரிங் பர்ஃபார்மர் என தேர்ந்தெடுக்க அதிக ஆப்ஷன் கொடுக்காமல், சரியா கார்னர் பண்ணி பாலாவையும் சுச்சியையும் ஜெயில்ல புடிச்சு பிக் பாஸ் போட்டுள்ள அதிரடியான முதல் புரமோ வைரலாகி வருகிறது.

இத்தனை நாளா பிக் பாஸ் வீட்டில் கல்லாட்டம் ஆடிக் கொண்டிருந்த பயில்வானை கரெக்ட்டா தூக்கிட்டாரு பிக் பாஸ் என ரசிகர்களும் ரொம்பவே ஹேப்பி.

இன்னைக்கு நிகழ்ச்சியில் ஏகப்பட்ட சம்பவங்கள் காத்துக் கிடக்கிறது என்றும் ஆவலோடு இருக்கின்றனர்.

வொர்ஸ்ட் பர்ஃபார்மர்

வொர்ஸ்ட் பர்ஃபார்மர்

பிக் பாஸ் நிகழ்ச்சியிலேயே ரொம்ப வொர்ஸ்ட் பர்ஃபார்மர் என்றால் ரசிகர்கள் பாலாஜி முருகதாஸை தான் தேர்ந்தெடுப்பார்கள். போரிங் போட்டியாளர் என்று சொல்ல முடியாவிட்டாலும், அவர் செய்யும் டகால்டி வேலைகளால் பிக் பாஸ் நிகழ்ச்சியே பாதிக்கப்பட்டு போரிங் ஆகிவிடுவது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸே சொல்லிட்டாரு

பிக் பாஸே சொல்லிட்டாரு

இன்றைய முதல் புரமோவில், பிக் பாஸே டைரக்ட்டா பாலாவை டைரக்ட்டா கார்னர் பண்ண பிக் பாஸே முடிவு பண்ணி சொல்லிட்டாரு. பாலாவை காப்பாற்ற ஹவுஸ்மேட்களுக்கு வேறு ஆப்ஷனே இல்லை என்பது தான் இதில் ஹைலைட். பாலாவை ஜெயிலில் போன வாரமே போட வேண்டியது தீபாவளி என்பதால் எஸ்கேப் ஆகிட்டார்.

ஜித்தன் ரமேஷ் கணிப்பு

ஜித்தன் ரமேஷ் கணிப்பு

கமல் சார் வார இறுதியில் பிக் பாஸ் விட்டால், நான் விடுவேனா, யாரை போரிங் போட்டியாளர் என தேர்வு செய்றீங்க என பாலாஜி முருகதாஸை நோக்கி வீசிய கத்தியை தேவையில்லாமல், முந்திரிக்கொட்டை சனம் ஷெட்டி தன் மீது வாங்கி சொருகி கொண்டார். ஆனால், ஜித்தன் ரமேஷ் அப்பவே பாலா தான் என சரியாக கணித்தார்.

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது

கடந்த மூன்று வாரங்களாகவே பிக் பாஸ் வீட்டின் லக்சரி பட்ஜெட் டாஸ்க்கில் பல தில்லாலங்கடி செய்து, ஏகப்பட்ட லக்சரிகளை கோட்டை விட்ட பாலாஜியை இந்த முறை கையும் களவுமாக பிடித்து ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்கிற ரேஞ்சில் பிக் பாஸ் வீட்டின் ஜெயிலில் பிடித்து போட்டுள்ளார் பிக் பாஸ்.

பொய் கணக்கு

பொய் கணக்கு

மணிக்கூண்டு டாஸ்க்கில் மத்த டீம் எல்லாம் உயிரைக் கொடுத்து விளையாடிய நிலையில், அதையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல், ரொம்ப நேரம் நிற்க சோம்பேறித்தனம் பட்டுக் கொண்டு சீக்கிரம் சீக்கிரமாக நேரத்தை எண்ணி ஏமாற்றிய பாலாவுக்கு சரியான ஆப்பு வைத்து விட்டார் பிக் பாஸ்.

பிக் பாஸ் ஜெயில்

பிக் பாஸ் ஜெயில்

கடந்த இரு வாரங்களாக காலியாக இருந்த பிக் பாஸ் வீட்டின் கண்ணாடி ஜெயிலுக்கு மீண்டும் கெஸ்ட் கிடைச்சிட்டாங்க. பாலாஜி முருகதாஸ், ரம்யா பாண்டியன், சுசித்ரா இந்த மூன்று பேரில், இருவரை தேர்ந்தெடுத்து கண்ணாடி ரூமுக்குள் அடைங்க என நேரடியாவே பொளேர் விட்டார் பிக் பாஸ்.

பாவம் ரம்யா பாண்டியன்

பாவம் ரம்யா பாண்டியன்

இந்த டீம்ல போயா என்னை சேர்த்தீங்க என ரம்ய பாண்டியன் ரொம்பவே அப்செட் ஆனார். ஆனால், ரம்யா பாண்டியனுக்கு இருக்கும் நல்ல பெயரால், அவரை விட்டு விட்டு, சுசித்ராவையும் பாலாஜி முருகதாஸையும் ஜெயிலுக்கு அனுப்ப ஹவுஸ்மேட்கள் ரொம்ப யோசித்தது எல்லாம் டூமச். பட்டுன்னு சொல்லி படாருன்னு ஜெயில்ல புடிச்சு அந்த ரெண்டு லூசையும் போட வேண்டாம்மா என ரசிகர்கள் கொந்தளிக்கின்றனர்.

ரொம்ப சந்தோஷங்க

ரொம்ப சந்தோஷங்க

பாலாஜி முருகதாஸையும், சுச்சியையும் ஒன்றாக கண்ணாடி அறைக்குள் பூட்டியதை பார்த்த ரசிகர்கள், ரொம்ப சந்தோஷங்க என பிக் பாஸுக்கு தேங்ஸ்லாம் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க, அந்த அளவுக்கு ரெண்டு பேரும் ஓவரா இரிடேட் பண்ணிருக்காங்க, இந்த வாரம் அப்படியே ரெண்டு பேரையும் சேர்த்து வெளியே அனுப்பிட்டா இன்னும் சிறப்பாக இருக்கும் என்ற கருத்துக்களும் எழுந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X