எல்லோரையும் பிக் பாஸ் கலங்க வைத்தார்.. அவரையே கதி கலங்க வைத்தது யாரு தெரியுமா? வைரலாகும் புரமோ 2!
சென்னை: இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோவில் ரம்யா பாண்டியன் கன்ஃபெஷன் ரூமிற்குள் செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த வாரம் முழுக்க கன்ஃபெஷன் ரூமில் போட்டியாளர்களை அழைத்து கலங்க வைத்து அனுப்பினார் பிக் பாஸ்.
ஆனால், அவரையே கதிகலங்க வைத்தது நம்ம ரம்யா பாண்டியன் தான் என ரசிகர்கள் இரண்டாவது புரமோவை பார்த்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

கண்ணீர் எபிசோடு
ஷிவானி நாராயணன் தொடங்கி நேற்று ஆஜீத் மற்றும் ஆரி என பிக் பாஸ் போட்டியாளர்கள் கன்ஃபெஷன் ரூமில் கண்ணீர் விட்டு அழுதனர். இன்னும் சில வாரங்களே ஷோ இருக்கும் நிலையில், முழு பங்களிப்பையும் கொடுங்க என்றும் போட்டியாளர்களிடம் கெஞ்சி கூத்தாடினார் பிக் பாஸ். அர்ச்சனா அழுதது தான் இதில் ஹைலைட்டே!

கன்ஃபெஷன் ரூமில் ரம்யா
இந்நிலையில், இன்றைய எபிசோடில் மீதமுள்ள ரம்யா பாண்டியன் மற்றும் பாலாஜி முருகதாஸ் கன்ஃபெஷன் ரூமிற்கு செல்வார்கள் என தெரிகிறது. தற்போது வெளியான 2வது புரமோவில் கன்ஃபெஷன் ரூமில் ரம்யா பாண்டியனிடம் பிக் பாஸ் நடத்திய உரையாடல் காட்சிகள் காட்டப்பட்டன.

ரம்யா அழவில்லை
கன்ஃபெஷன் ரூமிற்கு சென்ற ஒவ்வொரு போட்டியாளர்களும் சோகமாய் மாறியதும், கண்ணீர் சிந்தியதுமாக இருந்த நிலையில், ரம்யா பாண்டியன் கண்ணீர் வீட்டு அழுதது போன்ற காட்சிகள் புரமோவில் காட்டப்படவில்லை. அழுதிருந்தால் அதைத்தான் புரமோவில் வைத்திருப்பார்கள் என்பது வேறு கதை. சூப்பர் கூலாக பிக் பாஸிடம் ரம்யா பேசிவிட்டு வெளியேறினார்.

பிக் பாஸிடமே கேள்வி
இந்த பிக் பாஸ் வீட்டில வாழ்க்கை, கோபம், அழுகை, சக போட்டியாளர்கள் என ஒவ்வொரு கேள்வியாக ரம்யாவிடம் பிக் பாஸ் கேட்க, கேட்க அதற்கு பதில் அளித்து வந்த ரம்யா பாண்டியன், கடைசியாக சக போட்டியாளர்கள் குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் சிரித்து விட்டு, பிக் பாஸ் நான் ஒரு கேள்வி கேட்கலாமா? என்றார்.

அனிதா கலாய்
நான் கேட்டதுக்கு இன்னும் நீங்க பதில் சொல்லவில்லையே என பிக் பாஸ் கேட்க, மீண்டும் சிரித்து ஏமாற்றி விட்டு ரம்யா பாண்டியன் வெளியேறுவதை ஆரியுடன் அமர்ந்து கொண்டு பார்த்த அனிதா, பிக் பாஸையே கன்ஃபியூஸ் செய்து, அவரையும் சிரிக்க வைத்து வெளியே வந்திருக்கிறார் நம்ம ரம்யா பாண்டியன் என அனிதா கலாய்க்கும் காட்சிகள் இன்றைய இரண்டாவது புரமோவில் இடம்பெற்று வைரலாகி வருகின்றன.

ஜொள்ளு பிக்பாஸ்
இந்த சீசனில் பிக் பாஸ் ரொம்பவே ஜொள்ளு பார்ட்டியாக இருக்கிறார் என்றும், அடிக்கடி பெண் போட்டியாளர்களிடம் மட்டுமே பேசுகிறார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஷிவானி அழும்போது அழகா இருக்கீங்க என்றும், ரம்யா பாண்டியன் தொப்புளை காட்டியதும் லுக்கிங் நைஸ் என கமெண்ட் அடித்ததையும் வைத்து ஓட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











